Fact Check: சோனம் கபூருக்கு குழந்தை பிறந்ததா? வைரல் ஃபோட்டோ உண்மைதானா? பதில் கிடைச்சிடுச்சு..
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்த சோனம் கபூர், தொழிலதிபரான ஆனந்த அகுஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்த அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் தான் சோனம் கபூர். வாரிசு நடிகையான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவருக்கு பிலிம்பேர் நடிகைக்கான சிறந்த அறிமுக விருது கிடைத்தது. இதனையடுத்து பேட் மேன், சஞ்சு, ரான்ஜானா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்த சோனம் கபூர், தொழிலதிபரான ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்
View this post on Instagram
திருமண வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை என இரண்டையும் சமாளித்து வலம் வந்துக்கொண்டிருக்கும நடிகை சோனம், குழந்தையின் வரவேற்பிற்காக தற்போது காத்திருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சோனம் விரைவில் தாயாக உள்ளார். இந்நிலையில் சோனம்கபூருக்கு குழந்தை பிறந்துவிட்டதாக புகைப்படத்துடன் கூடிய ஒரு தகவல் வேகமாக பரவியது.
View this post on Instagram
உண்மைத்தகவல் தெரியாமல் பலரும் சோனம் கபூருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் சோஷியல் மீடியாவில் வெளியான புகைப்படம் போலியானது என்றும், அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.