மேலும் அறிய

Snehan | முடிந்தது டும்.. டும்.. டும்.. .. மகிழ்ச்சியில் சினேகன் - கன்னிகா தம்பதி!

சினேகன் -கன்னிகா தம்பதிக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

நடிகர் , பாடலாசிரியர் , அரசியல்வாதி என அறியப்படுபவர்  கவிஞர் சினேகன். ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என குறிப்பிட்ட  சில படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சினேகன்.  இந்நிலையில் சினேகன் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்திருந்தார். அதில்  “கவிஞர் சினேகன் அவர்கள் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என் அவர்கள்மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன்  இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்.” என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் சினேகன் திருமண செய்திகள் வைரலாகின.

அதன்படி இன்று சினேகன் - கன்னிகா திருமணம் மகிழ்வுடன் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சினேகன் -கன்னிகா தம்பதிக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

Snehan | முடிந்தது டும்.. டும்.. டும்.. .. மகிழ்ச்சியில் சினேகன் - கன்னிகா தம்பதி!

சினேகனை மணக்க உள்ள கன்னிகா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் , நடிகையாகவும் இருந்தவர். கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில்  ‘கல்யாண வீடு’  என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தவிர சிலம்பத்தை முறையாக கற்று தேர்ந்தவர். தன்னை ஒரு எழுத்தாளராகவும் கன்னிகா அறிமுகப்படுத்திக்கொள்கிறார். வருகிற 29 ஆம் தேதி சினேகன் - கன்னிகா திருமணம் , கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது.

Snehan | முடிந்தது டும்.. டும்.. டும்.. .. மகிழ்ச்சியில் சினேகன் - கன்னிகா தம்பதி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் , கமல் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சினேகன் அதிலும் வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமாவில்  இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் இன்றளவு ஹிட் லிஸ்டில் உள்ளன. 

Snehan | முடிந்தது டும்.. டும்.. டும்.. .. மகிழ்ச்சியில் சினேகன் - கன்னிகா தம்பதி!

கடந்த 1990 ஆம் ஆண்டு வைரமுத்து சமூக இலக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் செழியன் மூலம் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்து. சினிமா உலகில் காலடி வைத்தவர் சினேகன். முன்னதாக கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்தாண்டு காலம் உதவியாளராக பணிபுரிந்தார்.அதன் பிறகு பல வருட காத்திருப்பிற்கு பின்னர் ‘புத்தம் புது பூவே’ என்ற திரைப்படத்தில் பாடலாசிரியராகும் வாய்ப்பு சினேகனுக்கு கிடைத்தது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி
சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ்...சத்தமில்லாமல் ஒதுங்கிய மோகன் ஜி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget