Actress Simran : என்ன சிம்ரன் இதெல்லாம்... நீங்க இவ்வளவு அழகா பாடுவீங்களா... வைரலாக பரவும் வின்டேஜ் வீடியோ!
மிகவும் பரபரப்பாக சினிமாவில் கலக்கி வந்த சிம்ரன் அன்று பாடிய பாடல் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் ஒரு பிரபலமான முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் நடிகை சிம்ரன். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த சிம்ரன் முதலில் அறிமுகமானது இந்தியில் அதற்கு பிறகு தான் தமிழில் 1997ல் விஜய் ஜோடியாக 'ஒன்ஸ்மோர்' படத்தில் அறிமுகமானார் சிம்ரன்.
அடுத்தடுத்து நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, பம்மல் கே சம்பந்தம், கண்ணெதிரே தோன்றினாள் என ஏராளமான திரைப்படங்களில் கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, பிரஷாந்த், பிரபுதேவா, அர்ஜுன், முரளி, விஜயகாந்த், சரத்குமார் என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
சிம்ரன் திருமணம் :
மிகவும் உச்சத்தில் இருக்கும் சமயத்திலேயே தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டு குடும்பத்தில் கணவன் செலுத்தி வந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொஞ்ச காலம் பிரேக் எடுத்து கொண்ட சிம்ரன் சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சீரியல், ரியாலிட்டி ஷோ தொகுப்பாளினி, டான்ஸ் ஷோ நடுவர் என மிகவும் பிஸியாக இருந்தார்.
அதே கிரேஸ்:
பிறகு மீண்டும் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க துவங்கினார். 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் சூர்யாவின் மனைவி மற்றும் அம்மாவாக நடித்த கதாபாத்திரம் பாராட்டுகளை குவித்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க துவங்கிய சிம்ரன் நெகடிவ் ரோல்களிலும் பட்டையை கிளப்பினார். வெளியாக இருக்கும் அந்தகன், துருவ நட்சத்திரம் படங்களிலும் நடித்துள்ளார். அன்று இருந்த அதே கிரேஸ் சிம்ரன் மீது ரசிகர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
View this post on Instagram
வைரலாகவும் வின்டேஜ் வீடியோ :
மிகவும் பிஸியாக படங்களில் கலக்கி வந்த காலகட்டங்களில் நடிகை சிம்ரன் பாடிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக தற்போது பகிரப்பட்டு வருகிறது. சிம்ரன், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற விஐபி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே...' பாடலை சிம்ரன் பாடியுள்ளார். குயில் பாடும் இந்த வின்டேஜ் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.