மேலும் அறிய

Simbu | புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நடனமாடிய சிம்பு! - வைரல் வீடியோ!

”பாசிட்டிவாக இருந்தாலே போதும்! எல்லாம் குணமாகிவிடும் “ - சிம்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் , புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22 ஆம் தேதி ‘ரோஸ் டே’  பின்பற்றப்படுகிறது. நேற்று சென்னை , தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில்  நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில்  நடிகர் சிம்பு கலந்துக்கொண்டார். அப்போது அங்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேசிய சிம்பு , அவர்களுடன் இணைந்து ‘ ஐயம் அ லிட்டில் ஸ்டார், ஆவேனா சூப்பர் ஸ்டார் ‘ என்னும் தனது சிறு வயது பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடனமாடி முடித்த பின்னர் குழந்தைகளுடன் பேசிய சிம்பு. நீங்கள் அனைவரும்தான் எங்களுக்கு முன்மாதிரி, எப்போதுமே நேர்மறை எண்ணத்துடனே இருங்கள். அதுவே உங்களை குணப்படுத்தும். நீங்கள்தான் உண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாகவும்  குழந்தைகள் தன்னை பார்க்க ஆசைப்பட்டதால்தான் நான் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தெரிவித்த சிம்பு , புற்றுநோய் வருவதற்கான காரணம் புகையிலை மற்றும் புகைப்பிடிப்பது மட்டுமல்ல  அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என கூறினார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகளுக்கு மலர்செண்டு கொடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். இது தற்போது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Simbu | புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நடனமாடிய சிம்பு! - வைரல் வீடியோ!
சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொடுத்திருக்கிறார். படம் வருகிற ஆயுத பூஜையன்று திரைக்கு வரும் என கூறப்படுகிறது, விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போச்டர் வெளியாகி செம வைரலானது.எப்போது காதல் சப்ஜெக்டை கையில் எடுத்து கலக்கும் கவுதம் மேனனுக்கும் சரி, சிம்புவுக்கும் சரி , இந்த படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது இந்த படத்தின் இரண்டாவதுக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இது தவிர ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ‘ படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கும் ‘ கொரோனா குமார் படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டைட்டில் பாடல் சமீபத்தில் வெளியானது. அதனை சிம்புவே பாடியிருந்தார். கொரோனா குமார் படத்தின் அறிமுகமாக மட்டுமல்லாமல் CSK அணியை கொண்டாடுவது போலவும் இந்த பாடல் அமைந்திருந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget