மேலும் அறிய

Dhanush43 Simbu Hastag | தனுஷ் ரசிகர்களுக்கு டஃப் கொடுக்கும் சிம்பு ரசிகர்கள்! - டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சமகால நடிகர்களை போட்டி நடிகர்களாக பார்ப்பது வழக்கமான ஒன்றுதான்!

அட!  என்னப்பா  இன்னைக்கு தனுஷ் பிறந்தநாள் ஆனா ட்விட்டர் ட்ரெண்டிங்ல  சிம்பு இருக்காரே! மாநாடு அப்டேட் எதுவும் வந்திருச்சான்னு பார்த்தா, தனுஷ் ரசிகர்களை பின்னுக்கு தள்ளும் விதமா சிம்புவின் புகைப்படங்களை பகிர்ந்து வற்றாங்க சிம்பு ரசிகர்கள் .  #SilambarasanTR  என்ற ஹேஷ்டேக் மூலமா சிம்புவின் மாநாடு புகைப்படங்கள், வீடியோக்கள், அவரின் டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சிம்பு தனது ரசிகர்கள்தான் தனது பலம் என பல மேடைகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் காலை முதலே சிம்பு ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் சமகால நடிகர்களை போட்டி நடிகர்களாக பார்ப்பது வழக்கம். சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு போட்டியாக பார்க்கும் எண்ணம் இருக்கிறதோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் அது இருக்கும்!.  

எம்.ஜி .ஆர் மற்றும் சிவாஜி, விஜய் மற்றும் அஜித் , விக்ரம்  மற்றும் சூர்யா, தனுஷ் மற்றும்  சிம்பு தொடங்கி தற்போது விஜய்சேதுபதி  மற்றும் சிவகார்த்திகேயன் வரை இது தொடர்ந்துக்கொண்டே செல்கிறது.  தனுஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரது 43 வது படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானதால்  நேற்று முதலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார் தனுஷ். பொறுக்காத சிம்பு ரசிகர்கள் வேண்டும் என்றே தனுஷ் ரசிகர்களை சீண்டும் விதமாக .  #SilambarasanTR  என்ற டேக் லைனை டிரெண்டாக்கி வருகின்றனர். இதேபோல சிம்பு நடிப்பில் சமீபத்தில்  வெளியான   ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தில் “நீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா, நான் காக்கறதுக்காக வந்திருக்கேன்...ஈஸ்வரன்டா’  என்ற வசனத்தை பேசியிருந்தார். உடனே இந்த வசனம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படத்திற்கு  பதிலடி கொடுக்கும் விதமாக  எழுதப்பட்டிருப்பதாக சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அவ்வப்போது தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வது இயல்பான ஒன்றுதான். அது தங்கள் நடிகர் மீது இருக்கும் தீவிர அன்பின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இப்படியான நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே சினிமாவில் இரு நடிகர்களையும் ஒன்றாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் சிலர் முயற்சித்து வருகின்றனர். முன்னதாக சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற ஒரு பொறம்போக்கு என்ற பாடலை சிம்புவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலை சிம்புவுடன் இணைந்து தனுஷ் பாடுவதாக இருந்தது ஆனால்  தனுஷ் அப்போது மரியான் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டார். படப்பிடிப்பில் சிக்கிக்கொண்டதால் அவரால் சிம்புவுடன் இணைந்து பாட இயலவில்லை. இந்த திட்டமிடல் சரியாக அமைந்திருந்தால் ஒரு வேளை இந்த சோஷியல் மீடியா யுத்தம் சற்றும் குறைய வாய்ப்பாக இருந்திருக்கும். 

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget