‛கர்ணன்...டாக்டர்... மாஸ்டர்... தலைவி...’ SIIMA விருதுக்கு 4 தமிழ் படங்கள் பரிந்துரை!
சைமா (2022) விருதுகள், 2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள் சிறந்த படங்கள் 2021 என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சைமா (2022) விருதுகள், 2021 ஆம் ஆண்டில் வெளியான 4 தமிழ் படங்கள் ,சிறந்த படங்கள் 2021 என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென் இந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் வருடம் தோறும் நடைப்பெறும். அந்தவகையில் சைமா வருதுகள் தனது 10 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
இந்த விருது விழாவில், பெயருக்கு ஏற்றது போல் தென் இந்திய மொழிகளாகிய தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்த விருது துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற சர்வதேச நாடுகளில் நடைப்பெறும். கடந்த ஆண்டின் சைமா விருதுகள் ஹைதராபாத்தில் நடைப்பெற்றது.
#SIIMA2022
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 17, 2022
Tamil Nominations List.#Karnan#Doctor#Master#Thalaivii pic.twitter.com/zhnPEz3yQw
இதில் சூரரைப் போற்று படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை பெற்றது. இந்த வருடம், மாரி செல்வராஜின் கர்ணன்
படம், நெல்சனின் டாக்டர் படம், லோக்கேஷ் கனகராஜின் மாஸ்டர் படம் மற்றும் ஏ. எல். விஜயின் தலைவி ஆகிய 4 படங்கள் தேர்வாகியுள்ளது.இதில் தேர்வான நான்கு படமும் வேறுபட்ட கதைகளத்தை கொண்டவை.
View this post on Instagram
கர்ணன் :
இயக்குநர் - மாரி செல்வராஜ்
நடிகர் - தனுஷ்
நடிகை - ரஜிஷா விஜயன்
முக்கிய கதாப்பாத்திரங்கள் - லால், நடராஜன் சுப்பிரமணியன், யோகி பாபு
டாக்டர் :
இயக்குநர் : நெல்சன்
நடிகர் : சிவகார்த்திகேயன்
நடிகை: பிரியங்க மோகன்
முக்கிய கதாப்பாத்திரங்கள் : வினய், ரெட்டின் கிங்ஸ்லி, அர்ச்சனா, யோகி பாபு
மாஸ்டர் :
இயக்குநர்: லோகேஷ் கனகராஜ்
நடிகர் : விஜய்
நடிகை : மாளவிகா மோகனன்
முக்கிய கதாப்பாத்திரங்கள் : விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா
தலைவி :
இயக்குநர்: ஏ.எல்.விஜய்
நடிகை : கங்கனா ரனாவத்
முக்கிய கதாப்பாத்திரங்கள் :
அரவிந்த் சுவாமி, மதுபாலா, சமுத்திரகனி, ஷம்னா கசிம்.
இதில் தேர்வான நான்கு படமும் வேறுப்பட்ட கதைகளத்தை கொண்டவை என்பது குறிப்பிடதக்கது.