மேலும் அறிய

கடவுள்கிட்ட இருந்து செய்தி.. வாழ்நாளின் சிறந்த பரிசு... நெகிழ்ச்சியில் கமலுக்கு நன்றி சொன்ன சித்தார்த்! 

சித்தார்த் நடிக்கும் 'சித்தா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு, சித்தார்த்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கமல்ஹாசனுக்கு இன்ஸ்டா போஸ்ட் மூலம் நன்றி கூறியுள்ளார் சித்தார்த்.

பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் தற்போது 'சித்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் சித்தார்த் பிறந்தநாளான நேற்று 'சித்தா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். 

கடவுள்கிட்ட இருந்து செய்தி.. வாழ்நாளின் சிறந்த பரிசு... நெகிழ்ச்சியில் கமலுக்கு நன்றி சொன்ன சித்தார்த்! 

நடிகர் கமல்ஹாசன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நன்றிகளை தெரிவித்துள்ளார் நடிகர் சித்தார்த். " கடவுளுக்கு நன்றி. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நடிகரான ஒரு கலைஞனாக எனது படைப்புகள் மற்றும் சாதனைகளுக்கு நான் ஒருவருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அவர் தான் இணையற்ற கமல்ஹாசன்.  

சினிமாவிற்கு தான் என்றுமே முதலிடம் கொடுப்பேன். நான் செய்வதில் இருந்து கற்றுக்கொள்ள என்றுமே விரும்புவேன். கனவு காண்பதை என்றுமே நிறுத்த மாட்டேன். அதற்கு காரணம் எனது தொலைதூரக் கடவுள் கமல்ஹாசன். இன்று எங்களின் விருப்பத்திற்கேற்ப படங்களை எடுக்க முடிகிறது. அதற்கு காரணம் அவருடைய படங்கள் தான். அவர் தான் எங்களுக்கு வழி காட்டியுள்ளார். உயர்ந்த பாதையை  காட்டியுள்ளார். சார் நீங்கள் இல்லாமல் இந்த சித்தார்த் நடிகனாக ஆகியிருக்க முடியாது. 

அவரின் பிறந்தநாள் வாழ்த்துக்களால் இந்த நாள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நாளாக மாறிவிட்டது. சித்தா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எனது பிறந்தநாளான நேற்று வெளியிட்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். என் வாழ்க்கையில் வேறு எந்த பிறந்தநாள் பரிசும் என்னை இப்படி உணர வைக்குமென நான் நினைத்ததில்லை. இந்த வீடியோ என்னை அப்படி செய்தது. ஏப்ரல் 17, 2023 அன்று கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. என்னை அது நம்பவும் வைத்தது. சித்தா திரைப்படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும். கமல் சாரின் ஆசியுடன் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என பதிவிட்டு இருந்தார் சித்தார்த். 

மேலும் நடிகர் சித்தார்த், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு வெளியான அருவம் படத்திற்கு பிறகு தமிழில் வேறு படங்கள் வெளியாகவில்லை. மூன்று ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு தெலுங்கில் 'மகா சமுத்திரம்' படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, டக்கர், மற்றும் சித்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala: அப்படிப்போடு.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வரப்போகும் காப்பீட்டு திட்டம்!
அப்படிப்போடு.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வரப்போகும் காப்பீட்டு திட்டம்!
Bank Holidays in June 2024: ஜுன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை - பிளான் பண்ணிட்டு பேங்குக்கு போங்க
ஜுன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை - பிளான் பண்ணிட்டு பேங்குக்கு போங்க
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை - ரூ.1.10 கோடி வசூல்
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை - ரூ.1.10 கோடி வசூல்
Rafael Nadal: அதிர்ச்சி..! 14 முறை சாம்பியனான ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி - ஃபிரெஞ்சு ஓபனில் ஃபேர்வெல்?
Rafael Nadal: அதிர்ச்சி..! 14 முறை சாம்பியனான ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி - ஃபிரெஞ்சு ஓபனில் ஃபேர்வெல்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Hindu Muslim unity : பிள்ளையார் கோவில் கட்டுங்க! நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து அசத்தல்!IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!North Indian Issue | ’’அய்யோ..புள்ளை பிடிக்கறவன்?’’கட்டி வைத்த மக்கள்! சிக்கிய வடமாநிலத்தவர்Tirupati Accident News | திருப்பதி சென்ற குடும்பம் சுற்றுலாவில் நேர்ந்த சோகம் பதற வைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala: அப்படிப்போடு.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வரப்போகும் காப்பீட்டு திட்டம்!
அப்படிப்போடு.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வரப்போகும் காப்பீட்டு திட்டம்!
Bank Holidays in June 2024: ஜுன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை - பிளான் பண்ணிட்டு பேங்குக்கு போங்க
ஜுன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை - பிளான் பண்ணிட்டு பேங்குக்கு போங்க
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை - ரூ.1.10 கோடி வசூல்
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை - ரூ.1.10 கோடி வசூல்
Rafael Nadal: அதிர்ச்சி..! 14 முறை சாம்பியனான ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி - ஃபிரெஞ்சு ஓபனில் ஃபேர்வெல்?
Rafael Nadal: அதிர்ச்சி..! 14 முறை சாம்பியனான ரஃபேல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி - ஃபிரெஞ்சு ஓபனில் ஃபேர்வெல்?
Israel PM: ராஃபாவில் 45 பேர் பலியான சம்பவம் - ”நாங்க பண்ணது தப்பு தான்” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுபேச்சு
Israel PM: ராஃபாவில் 45 பேர் பலியான சம்பவம் - ”நாங்க பண்ணது தப்பு தான்” - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுபேச்சு
Today Movies in TV, May 28: செவ்வாய்கிழமை டிவியில் என்ன ஸ்பெஷல்.. இன்றைய படங்கள் இதோ!
செவ்வாய்கிழமை டிவியில் என்ன ஸ்பெஷல்.. இன்றைய படங்கள் இதோ!
Rasipalan: தனுசுக்கு ஆர்வம்.. மகரத்துக்கு ஓய்வு.... இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: தனுசுக்கு ஆர்வம்.. மகரத்துக்கு ஓய்வு.... இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Ajith Kumar: ”கண்ணுபட போகுதுங்க”  நியூ லுக்கில் மிரட்டும் அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்!
Ajith Kumar: ”கண்ணுபட போகுதுங்க” நியூ லுக்கில் மிரட்டும் அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்!
Embed widget