மேலும் அறிய

கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்ட்... என்ன பிரச்சனை ?சமாளிப்பாரா ஷங்கர் ?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கேம் சேஞ்சர்

ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் சொதப்பிய நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் கம்பேக் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார் ஷங்கர். முன்னணி தெலுங்கு நடிகரான ராம் சரண் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள படம் கேம் சேஞ்சர். பாலிவுட் நடிகை கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். கார்த்தி சுப்பராஜின் கதை ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைகா ஷங்கர் மோதல்

இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அப்படத்தின் தோல்வி மூலம் நஷ்டத்தை சந்தித்தது. முன்னதாக லைகா தயாரித்த லால் சலாம் , வேட்டையன் ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனால் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் விடாமுயற்சி மற்றும் இந்தியன் 3 ஆம் பாகத்தில் வெற்றியை நம்பியிருக்கிறது லைகா. இதில்தான் இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். 

இந்தியன்3 படத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்க ஷங்கர் 60 முதல் 70 கோடி வரை லைகாவிடம் கேட்டுள்ளார். இதில் ஷங்கரின் சம்பளம் 30 கோடியும் அடக்கம். இந்தியன் 2 படம் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்த காரணத்தினால் ஷங்கர் தனது சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் படத்தை முடிக்க தேவையான பணத்தை மட்டும் தாங்கள் கொடுப்பதாக லைகா தெரிவித்துள்ளது. இதனால் உடன்படிக்கைக்கு வர ஷங்கர் மறுத்துள்ளார். மேலும் இந்திய 3 படம் எவ்வளவு நிறைவடைந்திருக்கிறது என ஷங்கரிடம் போட்டு காட்ட லைகா கேட்டுள்ளது. ஆனால் படத்தை முடிக்கும் வரை தான் படத்தை போட்டுக்காட்ட முடியாது என ஷங்கர் மறுத்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் கேம் சேஞ்சர் படத்தை தமிழ் நாட்டில் வெளியிடுவதற்கு ரெட் கார்ட் விதிக்கும் படி திரைப்பட கவுன்சிலை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

சுமார் ரூ 450 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை என்றால் அதன் வசூலில் பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த பிரச்சனையில் ஷங்கர் லைகா ப்ரோடக்‌ஷன்ஸூடன் உடன்படிக்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Embed widget