மேலும் அறிய

Jawan Release: ஜவான் சுனாமி ஆரம்பம்..10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ்.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..!

ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் வெளியாக உள்ளதால் ஜவான் சுனாமி என்ற ஹேஷ்டேகை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலகளவில் 10 ஆயிரம் திரையரங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

ஜவான்:

ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ  ஜவான் படத்தை  இயக்கி உள்ளார். இந்தி திரையுலகில் அறிமுகமாகும் அட்லீ முதல் படத்தில், இந்தி மெகா ஸ்டாரான ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, ஹாலிவுட்டை கலக்கிய தீபிகா படுகோனே, வில்லத்தனத்தில் கெத்து காட்டும் விஜய்சேதுபதி என மெகா கூட்டணியை வைத்து படத்தை இயக்கி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வந்த ஜவான் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. 

முன்னதாக படத்தின் புரோமோஷனாக படக்குழு வெளியிட்ட ஒவ்வொரு பாடலுக்கும், கிளிம்ப்ஸ் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது. கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஜவான் பிரீ ரிலீஸ் விழாவில் ஷாருக்கான் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் நாளை ஜவான் வெளியாக உள்ளதால் ஜவான் சுனாமி என்ற ஹேஷ்டேகை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 

10 ஆயிரம் தியேட்டர்கள்:

இந்த சூழலில் ஜவான் திரைப்படம் உலகளவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் 5500 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 4500 திரையரங்குகளில் ஜவான் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசானதில் இருந்து வார இறுதிக்குள் ரூ.50 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10ம் தேதி ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 10 நாட்களில் ரூ.500 கோடியும், இதுவரை ரூ.600 கோடிக்கு மேலும் பாக்ஸ் ஆபிசில் வசூலாகி உள்ளது. ஜெயிலர் படம் வசூல் ரிதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது வெளியாக இருக்கும் ஜவான் ஜெயிலர் சாதனையை முறியடிக்குமா? படத்திற்கான வரவேற்பு எந்த அளவில் இருக்கும் என்ற விவாதமும் இணையதளத்தில் எழுந்துள்ளது. 

இதற்கிடையே ஜவான் ரிலீஸை ஒட்டி சிலம்பரம், மகேஷ் பாபு உள்ளிட்ட ரசிகர்கள் ஷாருக்கானிற்கும், அட்லீக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க: Jawan : ஜவானில் கெளரவ தோற்றத்தில் விஜய்? மாஸ் ஹீரோக்களை எண்ட்ரியை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்..

Boycott Jawan : ஜவானை புறக்கணிக்க வேண்டும்... சமூக வலைதளத்தில் திடீரென்று ட்ரெண்டாகும் ஜவான் எதிர்ப்பு

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. கிரீஸ் புறப்பட்ட மு.க.ஸ்டாலின் குடும்பம்!
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்
தீபாவளிக்கு நமக்கு சாம்பார் தான்...முத்துக்குமரன் வீடியோவுக்கு வகிதா கொடுத்த ரியாக்‌ஷன்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
Madurai GH: மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழல்? DMK தவறுக்கு TVK பொறுப்பேற்க வேண்டுமா? ரூ.9.3 கோடி எங்கே?
Hybrid SUV Discounts: ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
Embed widget