Taapsee Pannu : வெளியானது ஷபாஷ் மித்து ட்ரெயிலர்.. மித்தாலி ராஜாக கலக்கியிருக்கும் டாப்ஸி..
ஸ்ரீஜித் முகர்ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். அமித் த்ரிவேதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூலையில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஷபாஷ் மிது படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. மிதாலி கதாப்பாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். அவர் தவிர நடிகர்கள் தேவதர்ஷினி, மும்தாஜ் சோர்கர்,விஜய் ராஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீஜித் முகர்ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார்.அமித் த்ரிவேதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகின்ற ஜூலையில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.
முன்னதாக, ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பன் மொழிகளில் முன்னணி நாயகியாக உள்ளார். இவர் சமீபத்தில் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட ஹாரர் மூவிகளில் நடித்திருந்தார். அதுபோக இந்தியில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்த தப்பட், பிங்க் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பயோப்பிக்கில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த மிதாலி ராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் டாப்ஸி. மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார்.
39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.ரன் மெஷின் 12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868 ரன்கள் எடுத்துள்ளார் அவர். அவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2017 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் மிதாலி. மொத்தம் 7805 ரன்கள் குவித்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு இதே ஜூன் மாதத்தில் கடந்த 1999 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுக வீராங்கனையாக களம் கண்டார் மிதாலி. அப்போது அவருக்கு 16 வயது. அன்று முதல் இந்திய அணிக்காக மும்முரமாக ரன் குவித்து வந்தார். சீனியர் வீராங்கனையாக அணியை திறம்பட வழிநடத்தி வந்தார். இப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Thank you for all your love & support over the years!
— Mithali Raj (@M_Raj03) June 8, 2022
I look forward to my 2nd innings with your blessing and support. pic.twitter.com/OkPUICcU4u