மேலும் அறிய

பாக்ஸ் ஆஃபிஸில் மரண அடி... டோலிவுட்டில் வரலாறு காணாத தோல்வியைத் தழுவிய சமந்தாவின் சாகுந்தலம்!

படக்குழுவினரின் நம்பிக்கைகளுக்கு மாறாக சாகுந்தலம் படம் தெலுங்கு சினிமாவில் வரலாறு காணாத பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமந்தா நடிப்பில் பெரும் பொருட்செலவில் வெளியான டோலிவுட் திரைப்படம் சாகுந்தலம். 80 கோடிகள் பொருட்செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குணசேகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மணி சர்மா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நீலிமா குணா தயாரித்துள்ள இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவான சாகுந்தலம் படம் பான் இந்தியா திரைப்படமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. 

சமந்தாவுடன் தேவ் மோகன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில், அதிதி பாலன், சச்சின் கெதெக்கர், கௌதமி, மோகன்பாபு,பிரகாஷ்ராஜ்,  மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில வாரங்களாகவே முழுவீச்சில் ஈடுபட்டிருந்த நிலையில்,  படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்தது. இந்நிலையில், படக்குழுவினரின் நம்பிக்கைகளுக்கு மாறாக சாகுந்தலம் படம் தெலுங்கு சினிமாவில் வரலாறு காணாத பாக்ஸ் ஆஃபிஸ் தோல்வியைத் தழுவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காளிதாசர் எழுதிய புராணக்கதையான அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளே படம் பார்த்த விமர்சகர்கள் சமந்தாவின் திரைப் பயணத்தில் இந்தப் படம் ஒரு சீரியல், இந்தி சீரியலா புராணக் கதையா எனத் தெரியவில்லை என விமர்சனங்களை முன்வைத்தனர்.

சமந்தாவின் நடிப்பு மட்டுமே பாராட்டுகளைப் பெற்ற நிலையில், படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஎஃப்எக்ஸ், இசை என அனைத்தும் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. 

இந்நிலையில்,  பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளத்தின்படி சாகுந்தலம் படம் முதல் நாள், 3.2 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 1.85 கோடிகளும், மூன்றாம் நாள் 1.65 கோடிகளும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் முதல் வார இறுதியில் சாகுந்தலம் திரைப்படம் 7 கோடிகள் வரை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

டோலிவுட்டில் மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு படம் முதல் வார இறுதியில் இவ்வளவு குறைவாக வசூலித்ததில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  சமந்தா நன்றாக நடித்தும் சாகுந்தலம் படம் தோல்வியைத் தழுவியுள்ளது சமந்தா ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

மேலும் படிக்க: 19 Years of Gilli: ஆல் ஏரியாவுல நம்ப கில்லிடா...! ரீமேக் படத்திற்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தெரியுமா?

Actor Prashanth: பிரசாந்த் வீழ்ச்சிக்கு திருமணம்தான் காரணம்...ஆனா விஜய், அஜித்தைவிட ஓஹோனு இருக்கார்... ஜோடி பட இயக்குநர் பிரவீன் காந்தி பளிச்!

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget