Sruthi Shanmugapriya : செம்ம லவ் ஸ்டோரி.. Mr. தமிழ்நாடு அரவிந்த் சேகரை மணந்தார் நாதஸ்வரம் புகழ் ஸ்ருதி ஷண்முகப்ரியா..
இறுதியாக பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்த ஸ்ருதி, அந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்னதாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி , பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த நாதஸ்வரம் என்னும் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களிலும் நடித்திருந்தார்.அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் கோலிவுட்டிலும் தலைக்காட்டி வந்த ஸ்ருதி , தற்போது திருமண பந்தத்தில் இணைந்துவிட்டார். இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசு பெற்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
View this post on Instagram
தனது திருமண புகைப்படங்களை ஸ்ருதி , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகிறார். அவற்றை கீழே காணலாம்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
இறுதியாக பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்த ஸ்ருதி, அந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்னதாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு முழுமையாக நடிப்பிற்கு முழுக்கு போட்டு , குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த போகிறாரா அல்லது மீண்டும் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை





















