மேலும் அறிய

Arvind Kathare: எந்த மதமாக இருந்தாலும் சரி; குழந்தைகளை வழிபாட்டு தலங்களுக்கு அனுப்புங்க! கோரிக்கை வைத்த பிரபல சீரியல் நடிகர்!

நான் எப்பவும் நினைப்பது ஒன்று தான். நமக்கு மேல ஒரு சக்தி உள்ளது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி

நம்பிக்கை இல்லாமல் கடவுளின் பவரை உணர முடியாது என சீரியல் நடிகர் அரவிந்த் கதரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பெரிய திரையில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த அரவிந்த கதரே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். மருமகள், தெய்வ மகள், யாரடி நீ மோகினி என பல சீரியல்களிலும் நடித்துள்ள அவர், நேர்காணல் ஒன்றில் தன்னுடைய கடவுள் நம்பிக்கை பற்றி வெளிப்படையாக பல விஷயங்களை தெரிவித்துள்ளார். 

அதாவது, “இப்ப இருக்குற காலக்கட்டத்தில் இன்றைய தலைமுறையினர் நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை என்பது இல்லை. ஆனால் நான் எப்பவும் நினைப்பது ஒன்று தான். நமக்கு மேல ஒரு சக்தி உள்ளது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி. ஒரு சூப்பர் பவர் நம்மை காத்துக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் அதை உணர முடியாது. நமக்குள்ளே, நம்முடைய மனசாட்சி தான் கடவுள் என எங்க அம்மா சொல்லியிருக்கிறார். 

சின்ன வயதில் இருந்தே நான் பயந்த சுபாவம் கொண்டவன். இருட்டில் செல்லவே பயப்படுவேன். அப்போது அனுமான் கீர்த்தனை படிக்க சொன்னார்கள். அதை படித்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. பிறகு எனக்குள் இருந்த பயம் போய்விட்டது. படித்தால் பயம் வராது என்ற ஒரு நம்பிக்கை தான் நான் சொன்ன அந்த சூப்பர் பவருடன் தொடர்புடையது. அப்படித்தான் எனக்குள் பக்தி, கடவுள் மீதான பயம் என்பது இருந்தது. 

என்னுடைய நண்பர் தான் சாய் பாபா தரிசனம் செய்வதை கல்லூரி படிக்கும்போது அறிமுகம் செய்தார். இப்ப இருக்கிற பெற்றோர்களுக்கு நேரம் என்பது இல்லை. அவர்கள் குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். இது சரியானது இல்லை. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி குழந்தைகளை வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை பழக்க வேண்டும். என்னுடைய குழந்தைகள் நான் இல்லையென்றாலும் விசேஷ நாட்களில் கோயிலுக்கு சென்று விடுவார்கள்.

இப்ப இருக்கிற தலைமுறையினர் மாதா, பிதாவை தான் மதிக்கவில்லை. குரு, தெய்வத்தையாவது மதிக்க வேண்டும். நான் நிறைய சர்ச் போயிருக்கேன். அந்த இடமே அமைதியாக இருக்கும். கடவுளுக்கும் நமக்குமான தொடர்பு என்பது இருக்கும். அதேபோல் தர்காவில் இருக்கும் பவர் தனித்துவமானது. அதை எல்லாம் உணரும்போது தான் அந்த பவர் என்ன என்பது தெரியும். வருடத்துக்கு 2 முறையாவது வழிபாட்டு தலங்களுக்கு செல்லுங்கள். மனதுக்கு நிறைவாக உணர்வீர்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:  Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது” - பிரதமர் மோடியை சீண்டிய நடிகை ரோகிணி

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget