மேலும் அறிய

Sathyaraj Birthday: வில்லாதி வில்லன், நையாண்டி நாயகன், கலக்கல் ஹீரோ... தனித்துவமான நடிகர் சத்யராஜ் பிறந்தநாள்!

Sathyaraj Birthday: வில்லனாக வெற்றிபெற்ற சத்யராஜ்  ஹீரோவாக மாறுவதில் அவருக்கு  நிறைய சவால்கள் இருந்தன. இந்த சமயத்தில் வெளியான ரசிகன் ஒரு ரசிகை, கடலோர கவிதைகள் படங்களில் கதாநாயகாக நடித்தார்.

தன் நக்கல், நையாண்டி, வில்லத்தனம், ஹீரோயிசம் என ஒரு பேக்கேஜாக தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்து, தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சத்யராஜ் (Sathyaraj) இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வில்லன் டூ ஹீரோ


Sathyaraj Birthday: வில்லாதி வில்லன், நையாண்டி நாயகன், கலக்கல் ஹீரோ... தனித்துவமான நடிகர் சத்யராஜ் பிறந்தநாள்!

இந்த ஆண்டுடன் சத்யராஜ் தமிழ் சினிமாவுக்க்கு நடிக்க வந்து நாற்பதைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 45 ஆண்டுகளில்  தெலுங்கு, மலையாளம் , தமிழ்  என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார் .  வில்லன் , ஹீரோ, காமெடி, தயாரிப்பாளர்  என பன்முகத்தன்மையை தொடர்ந்து வெளிப்படுத்தி தனக்கென திரைத்துறையில் தனி இடத்தைப் பிடித்தார்.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் நம்பியார் தான் நமக்கு நினைவுக்கு வருவார், அவருக்கு அடுத்ததாக ரகுவரன் இந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்த அடையாளத்தைப் பெற்றவர் சத்யராஜ்!

கமல்ஹாசனுடன் அறிமுகம்

அவர் நினைத்திருந்தால் தமிழ் சினிமாவின் ஆல் டைம் வில்லன்களில் எளிதாக முன்னுக்கு வந்திருக்கலாம்.  நடிப்பதில் தீவீர ஆர்வம் கொண்ட சத்யராஜ் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறது கமல்ஹாசன் நடித்த சட்டம் என் கையில் படத்தில் முக்கிய வில்லனாக நடித்த தேங்காய் சீனிவாசனுக்கு அடியாளாக நடித்தார்.


Sathyaraj Birthday: வில்லாதி வில்லன், நையாண்டி நாயகன், கலக்கல் ஹீரோ... தனித்துவமான நடிகர் சத்யராஜ் பிறந்தநாள்!

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் சத்யராஜ். சிவாஜி கணேசன், பிரபு, மோகன் , விஜயகாந்த் முதலிய நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து வந்த சத்யராஜின் திறமையை அடையாளம் காட்ட வாய்ப்பளித்தார் அவரது கல்லூரி நண்பரான இயக்குநர் மனிவண்ணன். தான் இயக்கிய  ஜனவரி 1 படத்தின் சத்யராஜூக்கு துணை நடிகராக வாய்ப்பளித்தார். 24 மணி நேரம், நூறாவது நாள் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் கதாநாயகர்களை விட அதிகம் கவனிக்கப்பட்டார். சத்யராஜை வைத்து மொத்தம் 25 படங்களை இயக்கினார் மணிவண்ணன். அதில் 17 படங்களில் வில்லனாக நடித்தார்.

ரஜினிக்கு அப்பா

வில்லனாக வெற்றிபெற்ற சத்யராஜ்  ஹீரோவாக மாறுவதில் அவருக்கு  நிறைய சவால்கள் இருந்தன. மக்கள் அவரை மிக பயங்கரமான வில்லனாக  நம்பத்தொடங்கிவிட்டார்கள். இயக்குநர்கள் அவரை கதாநாயகனாக  நடிக்க வைத்த தயங்கினார்கள். இந்த சமயத்தில் வெளியான ரசிகன் ஒரு ரசிகை, கடலோர கவிதைகள் படங்களில் கதாநாயகாக நடித்தார்.

இந்தப் படங்கள் அவரது வில்லன் இமேஜை மாற்ற உதவின. இதனைத் தொடர்ந்து  மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்தார் சத்யராஜ், ரஜினியை விட அவர் நான்கு வயதே மூத்தவராக இருந்த போதிலும், வில்லன் அப்பாவாக அப்ளாஸ் அள்ளி ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து கடமை கண்ணியம் காட்டுபாடு, பூவிழி வாசலிலே, மக்கள் என் பக்கம் என வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

அமாவாசை முதல் பெரியார் வரை

Sathyaraj Birthday: வில்லாதி வில்லன், நையாண்டி நாயகன், கலக்கல் ஹீரோ... தனித்துவமான நடிகர் சத்யராஜ் பிறந்தநாள்!

மணிவண்ணன் இயக்கத்தில் அமாவாசையாக சத்யராஜ் கலக்கிய அமைதிப்படை திரைப்படம் அவருக்கு காலத்துக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. வில்லத்தனத்தாலும், அரசியல்வாதிகளின் வளர்ச்சியை பகடி செய்தும் திரையில் பிரதிபலித்த சத்யராஜ் அப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகியும் இந்த கேரக்டரில் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார்.

2000 காலக்கட்டத்தில் சத்யராஜூக்கு தொடர் தோல்விப் படங்கள் வெளியாகின. இதனை ஈடு செய்ய தனது ஹீரோ இமேஜை மாற்றி அதில் நகைச்சுவைத் தன்மையை இணைத்துக்கொண்டார் சத்யராஜ். காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கு ஒரு  புது அடையாளத்தைக் கொடுத்தார் சத்யராஜ். 

அடுத்த ரவுண்டுக்கு தயார்!


Sathyaraj Birthday: வில்லாதி வில்லன், நையாண்டி நாயகன், கலக்கல் ஹீரோ... தனித்துவமான நடிகர் சத்யராஜ் பிறந்தநாள்!

திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் தீவிர பற்றாளராக வலம் வருவதுடன், அவரது கதாபாத்திரத்தில் நடித்தும், அரசியல் கருத்துகளை அழுத்தமாக முன் வைத்தும் நடிப்பு தாண்டியும் கவனம் ஈர்த்து வருகிறார் சத்யராஜ்.

 

கடந்த 10 ஆண்டுகளில் ராஜா ராணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நண்பன், பாகுபலி, கனா என தமிழ், தெலுங்கு மொழிகளில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்து வரும் சத்யராஜ், தன் அடுத்த ரவுண்க்கு தற்போது தயாராகி உள்ளார்.

இவரது நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெப்பன் படம் தயாராகி வருகிறது. பன்முகக் கலைஞராக தன் திரைப்பயணத்தில் ஜொலித்து, 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்து அடுத்த ரவுண்டுக்கு  தயாராகிக் கொண்டிருக்கும் சத்யராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget