Sarath Babu Death: 'நண்பன் சரத்பாபுவை இழந்துவிட்டேன்.. ஈடு கட்ட முடியாத இழப்பு..' மனம் உடைந்த ரஜினிகாந்த்
Sarath Babu Death: பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபு இன்று அதாவது மே மாதம் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் காலமானார்.
பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபு இன்று அதாவது மே மாதம் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் காலமானார். இவரது மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் ”இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் சரத் பாபு இணைந்து பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றி அடைந்துள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் குறித்து இங்கு காணலாம்.
முள்ளும் மலரும்
முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினி மற்றும் சரத்பாபு இருவரும் இணைந்து நடித்த முதல் படம். தனது அகம்பாவத்தை விட்டுகொடுக்காத ஒரு கதாபாத்திரமாக ரஜினியும், கண்டிப்பான ஒரு சூப்பர்-வைசராக சரத்பாபுவும் முதல் சந்திப்பில் இருந்தே இருவரும் படத்தில் மோதிக்கொள்ளும் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். பின் ரஜினியின் தங்கையை காதலிக்கிறார் சரத்பாபு. தனது தங்கைக்காக ரஜினி படத்தின் கடைசியில் சரத்பாபுவை ஏற்ற்க்கொள்கிறார்
முத்து
முதல் படத்தில் மோதிக்கொண்ட இருவரும் அடுத்தப் படத்தில் (முத்து) மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ரஜினி தனது முதலாளியின் மனதை முழுவதுமாக புரிந்து வைத்திருப்பதும் சரத்பாபு ரஜினியை புரிந்து வைத்திருப்பதும் என படம் முழுவதும் இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி சூப்பராக அமைந்தது. ரஜினியை சரத்பாபு தனது வீட்டைவிட்டு வெளியேற்றும் போது ரசிகர்கள் நிஜமாகவே மனமுடைந்து தான் போனார்கள்.
அண்ணாமலை
கிட்டதட்ட இன்றுவரை ஒரு நல்ல ரிவெஞ்ச் ஸ்டோரியாக அண்ணாமலை இருக்கிறது. அண்ணாமலை அசோக்காக நடித்த சரத்பாபுவிடம் சவால் விடும் காட்சி இன்றுவரை விசில் போடத் தூண்டும் காட்சியாக இருக்கிறது.
பாபா
பாபா திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்பாபு. மேலும் மாவீரன் திரைப்படத்திலும் ரஜினியுடன் நடித்திருக்கிறார் சரத்பாபு. இந்த இருவரின் கூட்டணி நம்மை எப்போதும் ரசிக்கவைத்திருக்கிறது. இவர்கள் நடித்த அனைத்து படத்திலும் எதிரிகளாக இருந்து, பின்பு கடைசியில் நண்பர்களாக சேர்ந்துவிடுவது சரத்பாபு நமக்கு பிடித்த நடிகராக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
1977 ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, முள்ளும் மளரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து, பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
இவரது உடல் நாளை சென்னை தீ.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.