Samyuktha Hegde Injury: ‛இப்படித்தாங்க அடி பட்டுச்சு...’ வீடியோ வெளியிட்ட கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே!
நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோ பதிவில், “ நாங்கள் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தோம். அந்த சண்டைக்காட்சிக்காக கிட்டத்தட்ட 6 முறை ரிகர்சல் செய்திருந்தேன். அதன் பின்னர்தான் டேக்கிற்கு சென்றோம். டேக்கின் போது, என்னுடைய முழங்கால் ஒரு புள்ளியில் சற்று விலக நான் கீழே விழுந்தேன்.
கடுமையான வலி
தொடர்ந்து கடுமையான வலியில் துடித்த எனது மனது ப்ளாங்காகி விட்டது. சில நொடிகள் கடந்த பின்னர் கூட, வலி எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் உணரமுடியவில்லை. சின்ன காயங்களுக்கெல்லாம் அழதா ஒருவள் நான். இது போன்ற தருணங்களிலெல்லாம், தூசியை தட்டி விட்டு அடுத்தவேலையை பார்க்க சென்று விடுவேன். ஆனால் இந்த சமயம் அது முடியவில்லை. படப்பிடிப்பில் இருந்து என்னுடைய குழுவினர் உடனடியாக என்னை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
தசைநார் கிழிந்தது
எனது காயத்தை பார்த்த மருத்துவர் காயம் பெரிதாக இருக்காது என்று கூறினார். தொடர்ந்து எக்ஸ் ரே எடுத்து பார்த்தோம். அதில் என்னுடைய எலும்புகள் நலமாக இருப்பது தெரிந்தது.
View this post on Instagram
அதனைத்தொடர்ந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்தோம். இதுதான் என்னுடைய முதல் எம்.ஆர்.ஐ. அதை பார்த்த போது என்னுடைய தசைநார் முழுவதுமாக கிழிந்து இருந்தது தெரிந்தது.
அறுவை சிகிச்சைதான் தீர்வு
அதனையடுத்து பல மருத்துவர்களிடம் கலந்தோசித்தோம். அப்போது அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 3 மாதங்கள் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன போது எனக்கு அழுகையே வந்து விட்டது. இருப்பினும் இந்த காயத்தில் இருந்து மீளும் இந்தப்பயணத்திற்கு என்னுடைய முழுமுயற்சியையும் தருகிறேன். என்னை வலுப்படுத்தி கூடிய விரைவில் நான் மீண்டு வருகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படபாக்கிகொண்டிருந்த போது, நடிகை சம்யுக்தா ஹேக்டேவுக்கு காயம் ஏற்பட்டது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.