Samantha: பாலிவுட்டை பக்காவாக ப்ளான் செய்யும் சமந்தா.. அறிமுகமே இந்த நடிகருடன் ஜோடியா?
தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்துவிட்ட சமந்தா அடுத்து பாலிவுட் மீது கண் வைத்துள்ளார். தன்னுடைய முதல் ஹிந்தி படத்தை சமந்தா யாருடன் தொடங்குவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவர்ச்சியான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா. இவர், இப்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரத்தில் ஹாலிவுட்டின் கதவுகளையும் தட்டுகிறார். தனிப்பட்ட முறையில் அவரும் அவரது நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். அதன்பிறகு இரு பிரபலங்களும் திரையுலக வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர். குறிப்பாக சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி, சினிமா, வெப் சீரிஸ் என அனைத்து இடத்திலும் பம்பரமாக சுழன்று வருகிறார்.
View this post on Instagram
தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்துவிட்ட சமந்தா அடுத்து பாலிவுட் மீது கண் வைத்துள்ளார். தன்னுடைய முதல் ஹிந்தி படத்தை சமந்தா யாருடன் தொடங்குவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய்குமாருடன் கலந்துகொண்டார் சமந்தா. இந்நிலையில் கரண் இயக்கத்தில் அக்ஷய்குமாருடன் சமந்தா நடிக்க இருப்பதாக ஒரு பக்கம் தவவல் பரவியது. இந்நிலையில், சமந்தா தன்னுடைய பாலிவுட் அறிமுகத்தை ஆயுஷ்மான் குரானாவுடன் தொடங்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது. தினேஷ் விஜயன் இயக்கத்தில் உருவாகவுள்ள கமெர்ஷியல் எண்டெர்டெய்னர் படமாக இது உருவாகும் என கூறப்படுகிறது.
View this post on Instagram
முன்னதாக சல்மான்கானுடன் சமந்தா ஜோடி சேரவுள்ளதாகவும் தகவல் பரவியது.பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் 'No Entry Mein Entry' படத்திலும் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளத்.'No Entry' படத்தின் தொடர்ச்சியாக வரும் 'No Entry Mein Entry'படத்தில் 10 நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவராக சமந்தா ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகதநிலையில் சமந்தாவின் பாலிவுட் பிரவேசம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.