சமந்தா குறித்து அவதூறு.. கொதித்த தெலுங்கு திரையுலகம்.. மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் அமைச்சர் சுரேகா..
சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு பற்றி அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சை கருத்திற்கு நடிகர் நாகர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார்
நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ் காரணமாக இருந்தார் என தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்ட சுரேகா குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்திற்கு தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, நாக சைதன்யா, சமந்தா என பெரும்பாலானோர் வன்மையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில், தற்போது அமைச்சர் கொண்ட சுரேகா, தன் கருத்தைப் பின்வாங்கிக்கொள்வதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.
గౌరవనీయ మంత్రివర్యులు శ్రీమతి కొండా సురేఖ గారి వ్యాఖ్యలని తీవ్రంగా ఖండిస్తున్నాను. రాజకీయాలకు దూరంగా ఉండే సినీ ప్రముఖుల జీవితాలని, మీ ప్రత్యర్ధులని విమర్శించేందుకు వాడుకోకండి. దయచేసి సాటి మనుషుల వ్యక్తిగత విషయాలని గౌరవించండి. బాధ్యత గలిగిన పదవి లో ఉన్న మహిళగా మీరు చేసిన…
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2024
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2024
Disgusting to see politicians thinking that they can get away talking any kind of nonsense. When your words can be so irresponsible it’s stupid of us to expect that you will have any responsibility for your people. It’s not just about actors or cinema. This is not abt any…
— Nani (@NameisNani) October 2, 2024
Konda Surekha garu, dragging personal lives into politics is a new low. Public figures, especially those in responsible positions like you, must maintain dignity and respect for privacy. It’s disheartening to see baseless statements thrown around carelessly, especially about the…
— Jr NTR (@tarak9999) October 2, 2024
பிரிவுக்கு காரணம்
நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள். இந்த விவாகரத்திற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலையில் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. தற்போது தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்ட சுரேகா நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்தான் காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் கே.டி. ராமராவ் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கும் காரணமாக இருந்தார். போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்த ராமராவ் பல நடிகர்களை மிரட்டியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது நடிகர் நாகர்ஜூனா கொண்டா சுரேகாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கோரிய அமைச்சர் கொண்ட சுரேகா
அவரது கருத்திற்கு தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, நாக சைதன்யா, சமந்தா என பெரும்பாலானோர் வன்மையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில், தற்போது அமைச்சர் கொண்ட சுரேகா, தன் கருத்தைப் பின்வாங்கிக்கொள்வதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.