மேலும் அறிய

வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?

வில்லனாக அடுத்தடுத்த படங்கள் ஏமாற்றம் தந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கம்பேக் திரைப்படமாக அமையுமா ?

எஸ்.ஜே.சூர்யா என்றாலே வித்தியாசமான கதாபாத்திரங்கள் , தனித்துவமான நடிப்பும் தான்  நினைவுக்கு வரும். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்களில் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்றவர். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் 2 அவருக்கு மீண்டும் கைகொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயக்குநர் , ஹீரோ என பல அடையாளங்கள் இருந்தாலும் வில்லன் கதாபாத்திரம் என்று வந்துவிட்டால் ஹீரோவையே மிஞ்சிவிடும் அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் படத்தில் முதல் முறையாக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். தொடர்ந்து மெர்சல் படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது.  மாநாடு படத்தில் படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  தொடர்ந்து ராயன் மற்றும் சர்பரோ சனிவாரம் , மார்க் ஆண்டனி  ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு கவனம் பெற்றது.

வில்லனாக அடுத்தடுத்த தோல்விகள்

வில்லனாக கலக்கி வந்த எஸ் ஜே சூர்யா தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்த  இந்தியன் 2, கேம் சேஞ்சர், வீர தீர சூரன் , எல் ஐ கே  மற்றும் சர்தார் 2 ஆகிய படங்களில் அவர் வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் இந்த படங்கள் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. 

கைகொடுக்குமா ஜெயிலர் 2 ?

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5 அன்று வெளியான நிலையில், அதில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரமும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியனுக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரத்துக்கும் இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஜெயிலர் 2 படத்தில்  வித்யா பாலன்  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் , மிதுன் சக்கரவர்த்தி , குஞ்சக்கோ போபன் , சூரஜ் வெஞ்சரமூடு  உள்ளிட்ட  பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்றாலும் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரமே இவர்களுக்கு தலைவனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை நடிகர்கள் மத்தியில் எஸ் ஜே சூர்யா தனது தனித்துவமான நடிப்பால் நிச்சயம் ரசிகர்கள் கவர்வார் என்று எதிர்பார்க்கலாம்

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Embed widget