RT4GM: நோ சொன்னாரா விஜய்... ரூட்டை மாற்றிய வீரசிம்ஹாரெட்டி இயக்குநர்!
கோபிசந்த் மலினேனியின் முந்தைய படங்களான கிராக், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’யைப் போலவே, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ரவிதேஜாவின் புதிய படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.
டோலிவுட் சினிமாவின் மாஸ் மஹாராஜா எனக் கொண்டாடப்படும் ரவி தேஜா இயக்குநர் கோபிசந்த் மலினேனி உடன் இணைந்துள்ள புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரவி தேஜா- கோபிசந்த்:
நடிகர் ரவி தேஜா மற்றும் பிரபல இயக்குநர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி, தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது. திரைத்துறையில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் இக்கூட்டணியும் ஒன்றாகும்.
இந்த வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக தற்போது இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் RT4GM படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவங்கள்:
கோபிசந்த் மலினேனியின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களான கிராக், பாலகிருஷ்ணா நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’யைப் போலவே, உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித்துவமான கதையாக இருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒரு கிராமத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்தப் போஸ்டரில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது மற்றும் அபாய பலகை இடம்பெற்றுள்ளதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
#RT4GM ❤🔥Lets do it again @megopichand ✌️@MythriOfficial pic.twitter.com/dEmxkvxShi
— Ravi Teja (@RaviTeja_offl) July 9, 2023
நவீன் யெர்னேனி - ஒய்.ரவி ஷங்கர் இருவரும் மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தரத் தொழில்நுட்பத்தில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு டோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைக்கிறார். இதுவரை தோன்றாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி தேஜாவுக்கு இப்படம் அவரது திரை வாழ்வின் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இயக்குநர் கோபிசந்த் மலினேனி நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் மீண்டும் தெலுங்கு படமே இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.