மேலும் அறிய

காதலிப்பவரைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி? பாடம் சொல்லும் 'டியர் ரதி' திரைப்படம்!

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன? என்பதைச் சொல்லும் விதமாக 'டியர் ரதி' உருவாகி இருக்கிறது

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.

டியர் ரதி கதை பற்றி இயக்குநர்

"இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது  சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் 'டியர் ரதி' படத்தின் கதை.

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் 'ரொமான்டிக் காமெடி'யாக இந்த 'டியர் ரதி' திரைப்படம் உருவாகி இருக்கிறது " என்கிறார்.

படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். அவர் அறிமுகமாகும் படமிது. நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில்  கதிர் நாயகனாக நடித்த 'மீஷா' படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர்.  'மதராஸி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான். இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட். இவர் 'பொறியாளன்', 'சட்டம் என் கையில்' படங்களுக்கு இசையமைத்தவர். ஒளிப்பதிவு செய்துள்ளவர்  லோகேஷ் இளங்கோவன். இவர் 'நாய்சேகர்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளர், 'ஹர்ஹரா' படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். பிரேம் .B  படத்தொகுப்பு செய்துள்ளார்.இவர் செல்வா ஆர்கே - யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் .கலை இயக்கம் ஜெய் ஜெ.திலீப், நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் : ஹென்றி குமார். இப்படி புதுமுகங்களையும் அனுபவ சாலிகளையும் இணைத்துப் படக் குழு அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். கே .மணி. வரும் 2026 ஜனவரி 2 ஆம் தேதி இந்த  'டியர் ரதி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Embed widget