Nalkari Priyanka Marriage: மாலையும் கழுத்துமாக ஷாக் கொடுத்த ரோஜா... தொழிலதிபருடன் திடீர் திருமணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஜீ தமிழ் 'சீதாராமன்' சீரியல் கதாநாயகி நல்காரி பிரியங்கா திடீரென கோயிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடராக பல ஆண்டுகள் ஒளிபரப்பான மெகா தொடர் ரோஜா. அந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் அதன் ஹீரோயின் நல்காரி பிரியங்கா. பல ட்ரோல்களில் சிக்கிய ரோஜா தொடர் சில மாதங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது நல்காரி பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதிய மெகா தொடரான சீதாராமன் தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
புதிய தொடரில் நல்காரி பிரியங்கா :
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீதாராமன் தொடரில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நல்காரி பிரியங்காவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நல்காரி பிரியங்கா திடீரென தனது ரசிகர்களுக்கு ஷாக் ஒன்றை கொடுத்துள்ளார். நடிகை நல்காரி பிரியங்கா தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வைரலாகும் புகைப்படங்கள் :
மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் நல்காரி பிரியங்கா அவசர அவசரமாக திருமணத்தை முடித்து கொண்டு கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பதால் அனைவருக்கும் அழைப்பு வைத்து மிகவும் பிரமாண்டமாக தனது திருமணத்தை நடத்துவார் என எதிர்பார்த்தால் திடீரென தாலியுடன் மாலையும் கழுத்துமாக ஜோடியாக வந்து நிற்பதை பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
சஸ்பென்ஸாக முடிந்தது திருமணம் :
நல்காரி பிரியங்காவிற்கு ராகுல்வர்மா என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இது காதல் திருமணமா? அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்பது கூட தெரியவில்லை. கணவர் குறித்த எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. நல்காரி பிரியங்கா இவரை காதலித்து வந்தாரா என்பது குறித்த தழுவலும் தெரியவில்லை. அப்படி இருக்கையில் திடீர் திருமணம் மிகவும் சஸ்பென்ஸாக நடைபெற்றுள்ளது. ஆனால் புகைப்படங்கள் மட்டும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இவை இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்தாலும் இந்த புதுமண தம்பதியினருக்கு அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உங்களின் ஜோடி பொருத்தம் பிரமாதமாக உள்ளது என பாராட்டி வருகிறார்கள்.
திடீர் திருமணம் செய்யும் டிவி நடிகைகள் :
சமீபகாலமாக சீரியல் நடிகைகள் திடீர் திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை நடிகை நக்ஷத்ராவும் அறிவிப்பின்றி திருமணம் செய்து கொண்டு தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.