மேலும் அறிய

Ranveer Singh: 100 கோடி க்ளப்பில் இணைந்த ரன்வீர் சிங்... தொடர் தோல்விகளில் இருந்து தப்பிச்சாச்சு... காப்பாற்றிய கரண் ஜோஹர்!

கரண் ஜோஹர் இயக்கி ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி  திரைப்படத்தின் வசூல் நூறு கோடியை எட்டியுள்ளது.

கரண் ஜோஹர்

கடந்த 25 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் இயக்குநராக இருந்து வருபவர் கரண் ஜோஹர். Kuch kuch hota hei, kabhi kushi kabhi gum,  ye jawaani hai deewani ஆகிய படங்களை இயக்கியவர். பாலிவுட்டின் கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவராக கருதப்படுகிற கரண் ஜோஹர், தற்போது இயக்கியிருக்கும் படம்  ராக்கி  ஆர் ராணி கி பிரேம் கஹானி ( rocky aur rani kii prem kahani). ரன்வீர் சிங் மற்றும் அலியா பட் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் தர்மேந்திரா, பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் நடித்துள்ளார்கள். தர்மா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

ராகி ஆர் ராணி கி பிரேம் கஹானி

Ranveer Singh: 100 கோடி க்ளப்பில் இணைந்த ரன்வீர் சிங்... தொடர் தோல்விகளில் இருந்து தப்பிச்சாச்சு... காப்பாற்றிய கரண் ஜோஹர்!

ராக்கி மற்றும் ராணி ஆகிய இருவேறு குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். எல்லோரையும் போல் இவர்களின் சந்திப்பும் ஆரம்பத்தில் மோதலில்தான் தொடங்குகிறது. பின் இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. பிறகு என்ன பிரச்சனை படம் முடிந்துவிட்டதே என்று நாம் நினைப்பதற்குள் உண்மையான பிரச்சனை வெளிவருகிறது.

ராக்கி மற்றும் ராணி ஆகிய இருவரும் இணைய வேண்டுமானால் இந்த இருவரின் குடும்பமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இந்த காதல் ஜோடியைப்  போலவே இவர்களின் குடும்பமும் வெவ்வேறு குணங்கள் கொண்டவர்கள். இந்த இரண்டு வீட்டார்களையும் சம்மதிக்க வைக்க இவர்கள் கண்டுபிடிக்கும் வழி என்னத் தெரியுமா? படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர் தோல்விகளிக்குப் பின் வெற்றி

ரன்வீர் சிங்கின் முந்தைய படங்களான 83, ‘ஜெயேஷ்பாய் ஜோர்டார் , சர்க்கஸ் உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த ஆண்டின் வெற்றிகரமான ஒரு காதல் கதையாக அமைந்திருக்கிறது ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி. இந்தப் படத்தின் வெற்றி மூலம் சரிந்து வந்த பாலிவுட் மார்கெட்டை மீண்டும் உயர்த்தி இருக்கிறது ரன்வீர் - ஆலியா ஜோடி.

எவ்வளவு வசூல் ?

இந்தப் படம் வெளியாகி இதுவரை 12 நாள்கள் கடந்துள்ள நிலையில், இந்திய அளவில் 105 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் இப்படம் ரூ.105 கோடி வசூலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஷாருக்கின் பதான், சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கா ஜான், தி கேரளா ஸ்டோரி, ரன்பீர் கபூரின் தூ ஜூட்டி மெய்ன் மக்கர் ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ரன்வீர் சிங்கின் ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி படமும் இடம்பிடித்துள்ளது.

மேலும் படிக்க: Leo: ‘அண்ணன் வர்றார் வழிய விடு’ .. 2 பாகங்களாக வெளியாகும் லியோ.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
Embed widget