மேலும் அறிய

RIP Bhavatharini: என் கவிதைக்கு குரல் கொடுத்த பவதாரிணி! அம்மாவின் வாசனை! கனிமொழி எம்.பி புகழஞ்சலி!

Bhavatharini: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாடகி பவதாரிணி (Singer Bhavatharini) நேற்று புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனத் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

‘என் கவிதையை பாடிய பவதாரிணி’

அந்த வகையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து தன் இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இதுவரை வெளிவராத, பவதாரிணியின் குரலில் அமைந்த பாடல் ஒன்றையும் கனிமொழி எம்.பி பகிர்ந்து அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“அம்மாவின் வாசனை என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரிணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்தக் கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன்” என எம்.பி கனிமொழி பதிவிட்டு, பாடலையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Kanimozhi Karunanidhi (@kanimozhikarunanidhiofficial)

இந்தப் பாடல் கேட்போரைக் கலங்கடித்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் இரங்கல்

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு, இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்திருந்தார்.

இறுதிச்சடங்கு

பாடகியாக மட்டும் தன் இசைப் பயணத்தைத் தொடராமல், இசையமைப்பாளராகவும் விளங்கிய பவதாரிணி,  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் சமீபத்தில் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைக்க பவதாரிணி ஒப்பந்தமாகியிருந்தாதாகவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில், சென்ற மாதம் தான் பவதாரிணிக்கு பித்தப்பை புற்றுநோய் இருப்பது குறித்து கண்டறியப்பட்டதாகவும் இலங்கைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்ததாகவும் பவதாரிணியின் உறவினரும் நடிகையுமான கருணா விலாசினி தெரிவித்துள்ளார்.

பவதாரணியின் உடல் இன்று மாலை சென்னை, தி.நகரில் உள்ள இளையராஜாவில் இல்லத்து எடுத்துவரப்படும் என்றும், நாளை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
New Year 2025 Celebraton: #HappyNewyear வந்தாச்சு புத்தாண்டு 2025 ..! உற்சாக வரவேற்பு, கோயில், தேவாலயங்களில் குவிந்த மக்கள்
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Rasipalan January 1:2025ம் ஆண்டின் முதல் நாள்: உங்க ராசிக்கான பலன் எப்படி இருக்குனு பார்ப்போமா.!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Vidaamuyarchi Postponed: 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ்னு ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த அஜித்! லைகா அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
Thiruppavai 17: தற்பெருமை பேசாத மனமே சிறந்தது: திருப்பாவையில் கருத்தை சொன்ன ஆண்டாள்.!
Thiruppavai 17: தற்பெருமை பேசாத மனமே சிறந்தது: திருப்பாவையில் கருத்தை சொன்ன ஆண்டாள்.!
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Embed widget