மேலும் அறிய

ABP Southern Rising Summit 2023: இந்திய சினிமாவில் இது எல்லாம் ரொம்ப முக்கியம்.. நடிகை ரேவதி ஓபன் டாக்!

நடிகையும் இயக்குனருமான ரேவதி திரைத்துறையில் தனது 40 ஆண்டுகால அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். 

ஏபிபி-யின் ”தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான ”ABP Southern Rising Summit” கருத்தரங்கு இன்று (அக்.12) சென்னையில் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் அரசியல்வாதிகளும் சினிமா, அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், இயக்குனருமான ரேவதி தனது திரைத்துறையில் 40 ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

மனதிற்கு நெருக்கமான மௌன ராகம்:

நிகழ்ச்சியில் பேசிய அவர், மெளன ராகம் மணிரத்னத்தின் 4வது படம். அந்த படத்தை என்னிடம் சொல்லும் போது எந்த கதையாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருந்தேன். ஏனெனில், விவாகரத்து பற்றி பேச தயங்கும் அந்த காலத்தில் மௌன ராகம் மாதிரியான ஒரு படத்தில் நடித்தது எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நான் நடித்ததிலேயே மௌன ராகம் படம் எனக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. அதன்பின்னர், பல கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அதற்கு எல்லாத்துக்கும் ஈடாக ஒரே ஒரு படமாக மௌன ராகம்  உள்ளது. 

சினிமா துறையில் பெண்களை பொறுத்தவரை கதை, திரைப்பட தயாரிப்பு, ஆடை என எல்லாமே மாறிவிட்டது. அதற்கு ஏற்றார்போல் திரைப்படத்துறையும் மாறிவிட்டது. என்னுடைய தந்தை ஓய்வு பெற்ற ராணுவத்துறை அதிகாரி. இதனால் வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் வசித்து வந்துள்ளேன். இதனால் அதிகமான மொழிகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மலையாளம் மற்றும் தமிழ் மொழி எனக்கு சரளமாக வரவில்லை. ஆனாலும், நேரம் ஒதுக்கி மொழிகளை கற்றுக் கொண்டேன்.

இளையராஜா பாடல்கள் பிடிக்கும்:

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பாடல்கள் மிகவும் பிடித்த ஒன்று எனக்கு. பெரும்பாலான பெண்கள், எந்த கேரக்டர் சரியானது என்பதை தெரிந்து கொள்வதில் சிரமத்தை மேற்கொள்வார்கள். ஆனால், சரியான கேரக்டரை தேர்வு செய்தால் வளர்ச்சி அடைய முடியும்.

80களில் பிரபலமான இருந்த இயக்குநர் பாரதிராஜா தான் என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதனால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்ந்து வருகிறேன். ”நீ கதையையும், கேரக்டரையும் புரிந்து கொள்ள வேண்டும்” என எனக்கு சினிமா குறித்து பலவற்றை கற்று கொடுத்தார். ஏனென்றால் நான் சினிமா பின்னணியில் இருந்து வரவில்லை. 

சினிமாத்துறையை பொறுத்தவரை நம்பிக்கை என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும். இயக்குநர்கள் நம்பிக்குரியவராக இருந்தால் பிரச்சனை இல்லை. கமல்ஹாசன், சிவாஜி உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன். கைதியின் டைரி மற்றும் புன்னகை மன்னன் படங்களின் மூலம் இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. இந்திய சினிமாவில் நடிகர், நடிகைகள் டான்ஸ் தெரிந்து கொண்டிருப்பது அவசியமானதாக உள்ளது. ஆனால் நடிகர்களுக்கு சண்டை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இருந்தாலும், நடிகையாக சண்டை காட்சி இருக்கும் படங்களில் நடித்துள்ளேன். அது அவசியமானதும் கூட” என பேசியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget