மேலும் அறிய

Vivek 2nd death anniversary: பசுமை காதலனே!  சமூகஅக்கறை கொண்ட காமெடியனே... விவேக் 2ம் ஆண்டு நினைவு தினம்! 

சமூக சீர்திருத்த கருத்தினையும் மக்களிடம் கொண்டு சேர்த்த சின்ன கலைவாணர் விவேக் கருத்து சொன்னாலும் அதிலும் நக்கலும் நையாண்டியும் கலந்து காமெடி செய்த தனி சிறப்பு கொண்ட விவேக் 2ம் ஆண்டு நினைவு தினம்.

கிரியேட்டிவிட்டி கிங் என்ற பட்டத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்த இடத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்த கூடிய ஒரு கலைஞன் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக். மனதளவில் யாரையும் புண்படுத்தாமல் தனது தனித்துவமான நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தவரின் நினைவு தினம் இன்று.

Vivek 2nd death anniversary: பசுமை காதலனே!  சமூகஅக்கறை கொண்ட காமெடியனே... விவேக் 2ம் ஆண்டு நினைவு தினம்!  

சமூக சிந்தனையாளன் :

இந்த கலைஞனின் திறமைகளை நன்கு அறிந்து அவற்றை வெளிகொண்டுவந்த பெருமை இயக்குனர் பாலாசந்தரையே சேரும். தன்னுடைய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலம் விவேக்கை அறிமுக படுத்தினார். விவேக் என்ற ஒரு நடிகன் இருப்பதை அடையாளம் காட்டியது 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் அவரின் பிரபலமான 'இன்னிக்கு செத்த நாளைக்கு பால்' வசனம். அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக கலக்கிய விவேக் தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் என்எஸ்கே ஸ்டைலில் நகைச்சுவையோடு சேர்த்து மக்கள் தொகை அதிகரிப்பு, மூடநம்பிக்கை, ஊழல், லஞ்சம் இப்படி சமூக சீர்திருத்த கருத்தினையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததால் அவர் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். கருத்து சொன்னாலும் அதிலும் நக்கலும் நையாண்டியும் கலந்து காமெடி செய்வது விவேக்கின் தனி சிறப்பு.

ஒரு காலேஜ் புரபசராக வேண்டும் என ஆசைப்பட்ட நடிகர் விவேக் ஒரு நடிகரானது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். அவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர், பாடகர், ஆர்மோனியம், தபலா, வயலின் என இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை பெற்றவர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். 

பசுமை காதலன் :

விஞ்ஞானி மற்றும் குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்களின் தீவிரமான பற்றலரான விவேக் சமுதாயத்தின் மீது இருந்த சமூக அக்கறையோடு நாட்டில் இருக்கும் வறட்சியை மாற்றும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை செயல்படுத்தி மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக பசுமை காதலனாக திகழ்ந்து வந்தார்.  அதுமட்டுமின்றி அவரின் கொள்கைகளை மாணவர்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு தூதராகவும் விளங்கினார். தனது 13 வயது மகன் உடல்நலக்குறைவால் இறந்ததால் அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளை தொங்கி அதன் மூலம் பல சமூக சேவைகளை செய்து வந்தார்.

Vivek 2nd death anniversary: பசுமை காதலனே!  சமூகஅக்கறை கொண்ட காமெடியனே... விவேக் 2ம் ஆண்டு நினைவு தினம்! 

ஈடுசெய்ய முடியாத இழப்பு :

பத்மஸ்ரீ, பிலிம் பேர், தேசிய தமிழ் திரைப்பட விருது என ஏராளமான விருதுகளை பெற்றவர். சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் பல படங்களில் நிரூபித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி அதிகாலை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இறப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவர் இந்த உலகை விட்டு பிரிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அவரின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பேரிழப்பாகவே இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget