மேலும் அறிய

மலையாள சினிமாவின் மீட்பர்கள் - 01: 19 வயதிலேயே கவனிக்க வைத்த பிரித்விராஜ்!

சூப்பர் ஸ்டார்களை மட்டுமே நம்பி இருந்த மலையாள சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது என்ற சூழலில் தான் 2002-ல் சினிமாவுக்குள் 19 வயதில் அடியெடுத்து வைத்தார் பிரித்விராஜ் சுகுமாறன்.

மலையாள படங்கள் என்றாலே தவறாக பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் போய், இன்று மலையாள சினிமாக்கள் பிற மொழி படங்களுக்கு முன்மாதிரியாக மாறிவிட்டன. பெரிய பட்ஜெட்டில் படங்களை தமிழ் சினிமா எடுத்துவந்தாலும், இயற்கை அழகியலுடன் வித்தியாசமான கதைகளை கொண்டு கேரள மக்களின் வாழ்வியலை பேசும் மலையாள படங்களே அண்மை காலங்களில் மக்களை அதிகம் கவர்ந்து வருகின்றன.

ஆனால், 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மலையாள சினிமாவின் நிலை இப்படி இருக்கவில்லை, அப்போது சினிமாவுக்குள் புதிதாக நுழைவதே சிக்கலான ஒன்றாக இருந்தது. சூப்பர் ஸ்டார்களை மட்டுமே நம்பி இருந்த மலையாள சினிமாவில் புதிய கதைகள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது.  இந்த சூழலில் தான் 2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவுக்குள் தனது 19 வயதில் அடியெடுத்து வைத்தார் பிரித்விராஜ் சுகுமாறன்.

மலையாள சினிமாவின் மீட்பர்கள் - 01: 19 வயதிலேயே கவனிக்க வைத்த பிரித்விராஜ்!

ரஞ்சித் இயக்கிய நந்தனம் படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து அவரது படங்கள் ஹிட் ஆக சிறுவயதிலேயே பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் அங்கீகாரம் புதிய கதைகளை தேர்வு செய்து நடிக்க விடாமல் தடுத்தது. அவரது ஆரம்ப காலங்களில் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்கவில்லை. போகப்போக அவரது படங்களும் உரிய வரவேற்பை பெறாமல் போயின. இந்த சூழலில் தான், தனது நிலைபாட்டிலிருந்து விலகி புதிய கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் பிரித்விராஜ். பொறியியல் மாணவனாக அவர் நடித்த புதிய முகம் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது.

மலையாள சினிமாவின் மீட்பர்கள் - 01: 19 வயதிலேயே கவனிக்க வைத்த பிரித்விராஜ்!
வயதான வேடத்தில் பிரித்விராஜ்

2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பிரித்வி ராஜ், புதுவிதமான கதைகள், இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கத் தொடங்கினார். 2017 ஆம் தனியாக பிரித்விராஜ் ப்ரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி எஸ்ரா, ஆதம் ஜோன், டியான், ரணம், நைன் என அடுத்தடுத்து வித்தியாசமான படங்களை தயாரித்து நடித்தார். அவர் கடந்த சில ஆண்டுகளில் நடித்த மெமரீஸ், அய்யப்பனும் கோஷும், 7த் டே, டிரைவிங் லைசன்ஸ் போன்ற பெரும்பாலான படங்கள் மலையாள சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை கொடுத்தன. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி கண்டன.

சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தயாரிப்பாளராக உருவெடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த பிரித்விராஜ், லூசிபர் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். மோகன்லால் நடித்த அந்த அரசியல் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.  மலையாள திரையுலகில் அதிகம் வசூல் செய்த படமாகவும், மோகன்லாலின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும் பேசப்பட்டது லூசிபர். இதை தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ப்ரோ டேடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் பிரித்விராஜ். லூசிபரின் வெற்றியால் ப்ரோ டேடி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிரி இருக்கிறது.

மலையாள சினிமாவின் மீட்பர்கள் - 01: 19 வயதிலேயே கவனிக்க வைத்த பிரித்விராஜ்!

ப்ரோ டேடிக்கு பிறகு லூசிபர் படத்தின் அடுத்த பாகமான எம்புரான் படமும் 2022 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல், அந்தாதூன் படத்தின் மலையாளம் ரீமேக்கான ப்ராமம், கடுவா, பரோஜ், ஜன கன மன, தீர்ப்பு, விலயத் புதா, கோல்டு மேக்னம் ஓபுஸ், ஆடுஜீவிதம் என பல படங்களை கைவசம் வைத்து உள்ளார் பிரித்விராஜ். 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு மலையாள சினிமா உலக தரத்துக்கு உயர்ந்து போற்றப்படுகிறது என்றால், அதற்கு இந்த தலைமுறை நடிகர்களில் பிரித்விராஜின் பங்களிப்பு மிக முக்கிய காரணம்.

இந்த பயணம் பிரித்திவிராஜோடு மட்டுமே நின்றுவிடவில்லை. மலையாள சினிமாவின் அடுத்த மீட்பரை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget