பாடகி கெனிஷாவுக்கு கொலை மிரட்டல் ! உடனே வெளிவந்த வக்கீல் நோட்டீஸ்..என்ன சொல்லியிருக்காங்க?
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து விஷயத்தில் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் பல அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்

கெனிஷா ஃபிரான்சிஸ்
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இனிமேல் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ரவி மோகன் காதலிப்பதாக சொல்லப்படும் பாடகி கெனிஷாவும் வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்கள் , கொலை மிரட்டல் , பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுவரை சமூக வலைதளத்தில் கெனிஷாவை மிரட்டியவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக கெனிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து
கடந்த ஆண்டு ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி இந்த விவகாரத்தில் ரவி மோகன் தன்னை கலந்தாசிக்கவில்லை என கூறி அதிர்ச்சியை கிளப்பினார். ஆர்த்தி மற்றும் அவரது தாயின் கட்டுப்பாட்டில் ரவி மோகன் இத்தனை வருடம் இருந்து வந்ததாகவும் அவரது சொத்துக்களை ஆர்த்தி அபகரித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே நேரம் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு இருந்த தொடர்பே இந்த விவாகரத்திற்கு காரணம் என ஆர்த்தி ரவி ஆதரவாளர்கள் தெரிவித்தார். சமீபத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இணைந்து திருமண நிகழ்வில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை மீண்டும் வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ரவி மோகன் மற்ற்றும் ஆர்த்தி இருவரும் தங்கள் குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களை முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்கள். ஆர்த்தி தன்னை தன் குடும்பத்தினரிடம் இருந்து பிரித்ததாக ரவி மோகன் குற்றம் சாட்டினார். கெனிஷாவின் வருகையே இந்த பிரிவுக்கு முக்கிய காரணம் என ஆர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பாடகி கெனிஷாவிற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல்கள் மற்றும் அவதூறு பேச்சுக்கள் வரத் தொடங்கின. தற்போது கெனிஷா அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவிருப்பது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம்.
View this post on Instagram






















