மேலும் அறிய

Sivakarthikeyan : தெலுங்கில் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. நாயகி ராஷ்மிகா..?

சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது

பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும்  தனது ரசிகர்களாக பெற்றிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவரது நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம்  “டாக்டர்”. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தவிற யோகி பாபு, வினய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

மேலும் சிவாவின் நண்பர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மார்ச்  மாதமே இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் அப்போது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு. கடந்த மே மாதம் 11 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், படம் வெளியிடப்படாமல் முடங்கி போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் படம் மீண்டும் திரையரங்கம் திறந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Sivakarthikeyan : தெலுங்கில் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. நாயகி ராஷ்மிகா..?

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. தெலுங்கு இயக்குநரான அனுதீப், சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கில் இயக்கிய முழு நீள காமெடி படமான ’ஜாதி ரத்னாலு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் பட்டையைக் கிளப்பியது ஜாதி ரத்னாலு. அமெரிக்காவிலும் இந்தப் படம் அதிக வசூலைப் பெற்றது. வெளியான ஒரு மாதத்துக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்தது. அதாவது ரூ. 7.25 கோடி.  6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஏற்கனவே இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ஜாதி ரத்னாலுவின் வெற்றியை அடுத்தே அனுதீப்பை சிவகார்த்திகேயன் டிக் செய்துள்ளதாக தெரிகிறது. படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கீதா கோவிந்தம் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள ராஷ்மிகாவுக்கு தமிழிலும் ரசிகர் வட்டம் உண்டு. இவர் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனுடன் ராஷ்மிகா ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகும் எனவும், அனிருத் இசையமைக்க வாய்ப்புண்டு என்பதும் கூடுதல் தகவலாக வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan : தெலுங்கில் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்.. நாயகி ராஷ்மிகா..?

இதற்கிடையே, விஜயை அடுத்து இயக்கப்போவது தெலுங்கு இயக்குநர் எனவும் கூறப்படுகிறது. தெலங்கு இயக்குநர் வம்சி தான் தளபதி 66ன் இயக்குநர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தையும் தெலுங்கு இயக்குநர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ளது

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget