வீட்டுக்கு வந்து வாசல் கேட்டை கல்யாணம் பண்ணாங்க.. 'முதல் மனைவி' என ரன்பீர் சொன்ன ரகசியம்!
"என் வீட்டுக்கு முன்னாள் ஒரு பெண் , பண்டிதருடன் வந்ததாக என் வாட்ச்மேன் தெரிவித்தார்."
ரன்பீர் கபூர் :
ரன்பீர் கபூருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் குறித்தோ அவரை குறித்தோ இப்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. ரன்பீர் கபூர் தனது நீண்ட நாள் காதலியான ஆலியா பட்டை இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளங்களை கலக்கின. நான் ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரன்பீர் கபூரி்ன் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஷாம்ஷேரா மற்றும் பிரம்மாஸ்திரா ஆகிய இரண்டு படங்களின் புரமோஷன் வேலைகளில் ரன்பீர் விரைவில் இறங்கவுள்ளார்.
View this post on Instagram
முதல் மனைவி :
இந்த நிலையில் ரன்பீர் தனது முதல் மனைவி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். என்னது முதல் மனைவியா என கேட்கலாம்..? அதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறது. “ என் வீட்டுக்கு முன்னாள் ஒரு பெண் , பண்டிதருடன் வந்ததாக என் வாட்ச்மேன் தெரிவித்தார். நான் அந்த பெண்ணை சந்திக்கவில்லை. ஆனால் அவர் எனது வீட்டின் கேட்டை திருமணம் செய்துக்கொண்டார். நான் பார்க்கும் பொழுது அங்கு அட்சதை மற்றும் மலர்கள் இருந்தன. எனது முதல் மனைவியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் “ என தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூருக்கு இது போன்ற ஏராளமான கிரேஸியெஸ்ட் ரசிகர்கள் உள்ளனர்.ஆல்யாவும் சிறு வயதில் இருந்தே ரன்பீர் கபூரின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
View this post on Instagram