மேலும் அறிய

Ramayana : 31 ஆண்டுகளுக்குப் பின் தடை நீங்கி மீண்டும் வெளியாகிறது ராமாயணா அனிமேஷன் திரைப்படம்

ஜப்பானிய நிறுவனம் தயாரித்த ராமாயண அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது

ராமாயணம் , மகாபாரதம் ஆகிய இந்து புராணக் கதைகளை மையப்படுத்தி புதுப்புது படங்கள் வெளியாகியபடி இருக்கின்றன. பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் , மற்றும் கல்கி இந்த புராணங்களை மையப்படுத்தி உருவானவை. தற்போது பாலிவுட்டில் தங்கல் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணத்தை திரைப்படமாக இயக்கி வருகிறார். இது தவிர்த்து பாகுபலி இயக்குநர் ராஜமெளலி மகாபாரதத்தை 10 பாகங்கள் கொண்ட படமாக எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கான திரைக்கதை பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார். எத்தனை படங்கள் வந்தாலும் 90 களில் வந்த ராமாயணம் மற்றும் மகாபாரத தொலைக்காட்சித் தொடர்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் ஒரு பெரிய மதிப்பு இருக்கிறது. 

ராமாயணா அனிமேஷன் திரைப்படம்

1990 களில் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான ராமாயணா தொடர் மிக புகழ்பெற்றது. அதே போல் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்த அனிமேஷ் படம் Ramayana the legend of prince rama. ஜப்பானிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த படம் ராமர் வனவாசம் சென்றது முதல் ராவணனிடம் இருந்து சீதை மீட்டு மீண்டும் நாடு திரும்பும் கதையை சுவாரஸ்யமான அனிமேஷன் படமாக சொன்னது. ஆனால் ஜப்பான் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இப்படத்தில் இந்து கடவுள்கள் சித்தரிக்கப்பட்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. தற்போது கிட்டதட்ட 31 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

31 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் ராமாயணா அனிமேஷன் படம்

View this post on Instagram
 
A post shared by Geek Pictures India (@geekpictures_india)

இப்படத்தை தயாரித்த கீக் பிக்ச்சர்ஸ் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். அதன்படி வரும் அக்டோபர் 18 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தமிழ், இந்தி , ஆங்கிலம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. 90 ஸ் கிட்ஸ்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
Embed widget