மேலும் அறிய

RT68 First Look: மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் ’ராமாராவ் ஆன் டூட்டி’ - பட்டையை கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக்..!

ரவி தேஜாவுக்கு பின்னால் அரசாங்கத்தின் ஜீப் ஒன்று நிற்கிறது. இதன்மூலம், இந்தப் படத்தில் அவர் ஒரு அரசு அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் 68ஆவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ’ராமாராவ் ஆன் டூட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் ரசிகர்களால் மாஸ் மகாராஜா என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரவி தேஜா. இவரது படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனென்றால், அந்தளவிற்கு ரவி தேஜாவின் படங்கள் பக்கா கமர்ஷியலாக இருக்கும். கமர்ஷியல் திரைப்படங்களுக்கு தேவையான அனைத்தும் இவரது படங்களில் இருக்கும். முக்கியமாக நகைச்சுவை காட்சிகளில் மனுஷன் அதகளப்படுத்துவார். காமெடி நடிகர்களுடன் சேர்ந்து இவர் நடிக்கும்போதெல்லாம், ஒரு சில நேரத்தில் அவர்களையே ஓவர் டேக் செய்து விடுவார். பல ஹிட் படங்களை கொடுத்த ரவி தேஜா, சில வருடங்களாக பெரிய ஹிட் கொடுக்காமல் தவித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வந்த ‘கிராக்’ திரைப்படம் அவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது. 

Soorarai Pottru Remake | இந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப் போற்று’ - சூர்யா கொடுத்த சூப்பர் அப்டேட் என்ன?

இந்நிலையில்,  ரவி தேஜாவின் 68ஆவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ’ராமாராவ் ஆன் டூட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில், ரவிதேஜா பேண்ட் பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டு, சன் கிளாஸூடன் ஸ்டைலாக நிற்கிறார். அவருக்கு பின்னால் அரசாங்கத்தின் ஜீப் ஒன்று நிற்கிறது. இதன்மூலம், இந்தப் படத்தில் அவர் ஒரு அரசு அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிகிறது. ஃபர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து, ரவி தேஜாவின் ரசிகர்கள் அதனை சமூகவலைதளங்களில் ஷேர் செய்தும், டிரெண்ட் செய்தும் வருகின்றனர். ரவி தேஜாவுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கெளசிக் நடிக்கிறார். 

 

அறிமுக இயக்குநர் சரத் மண்டவா இந்தப் படத்தை இயக்குக்கிறார். சுதாகர் செருகரி தயாரிக்கும் இந்தப் படம் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழ் இசையமைப்பாளார் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதாராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ராமராவ் ஆன் டூட்டிக்குப் பிறகு, ரவி தேஜா, இயக்குனர் திரிநாத ராவ் நக்கினா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கில்லாடி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Rakul Preet | ”இது வெறும் ஆரம்பம்தான்“ : பாலிவுட்டில் அதிரடி காட்டும் ரகுல் பிரீத் சிங்!

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Embed widget