Rakhi Sawant : எனக்கு முத்த காட்சிகள் மட்டுமே, மொத்த காட்சியும் நடிக்க வாய்ப்புவேணும்.. அதிரடி காட்டிய பிரபலம்..
எனக்கு முத்தக் காட்சிகள் மட்டுமில்லாது வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குகள் என்று நடிகை ராக்கி சாவந்த் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
பாலிவுட் திரையுலகில் உர்பி ஜாவத்க்கு பிறகு அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்தான் இந்த ராக்கி சாவந்த். இவர் ஏதோ ஒரு காரணங்களால் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படுவார். இவர் தமிழில் என் சகியே மற்றும் முத்திரை போன்ற படங்களில் கவர்ச்சி படத்திற்கு நடனமாடியுள்ளார்.
இவரை பெரும்பாலும் இயக்குநர்கள் கவர்ச்சி குத்து பாடலுக்கும், லிப் லாக் முத்த காட்சிகளுக்கு மட்டுமே அழைப்புவிடுவர். இவரும் தனக்கு கிடைக்கும் அத்தகைய கதாபாத்திரங்களில் தவறாமல் நடித்து விடுவார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், எனக்கு முத்தக் காட்சிகள் மட்டுமில்லாது வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குகள் என்று தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
இதுகுறித்து ராக்கி சாவந்த் அளித்த பேட்டியில், "நீங்கள் எங்களை ட்ரோல் செய்தால்தான் நாங்கள் சினிமா நட்சத்திரங்கள். அப்படி இல்லை என்றால் நாங்கள் எப்படி நட்சத்திரங்கள் ஆவோம்? எங்களை ட்ரோல் செய்யவதை தவிர உங்களால் எங்களை என்ன செய்ய முடியும்? அதிகபட்சமாக, நீங்கள் எங்களை மனதளவில் காயப்படுத்த முடியும். ஆனால் எங்களை கொல்ல முடியாது. எல்லோரும் நம்மைப் பற்றி நன்றாகப் பேசினால், அவை எங்களுக்கு ஒரு சில நேரங்களில் இனிப்பாகவும், கசப்பாகவும் அமையலாம். ஒரு நபர் ட்ரோல் செய்வதால் ஒரு சிலரை அது மாற்றலாம். ஆனால் நான் மாற மாட்டேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருப்பேன். நான் யாரையும் புண்படுத்தவில்லை, நான் மிகவும் நேர்மையானவள்.
பாலிவுட்டில் ஏதாவது ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், என்னை தவிர அங்கு யாரும் இல்லை. என் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. புற்றுநோயால் மிகவும் வேதனையில் இருந்தார், யாரும் இல்லை. நான் கடினமாக உழைத்தேன், குட்டையான ஆடைகளை அணிந்தேன், பாலிவுட்டில் என்னை நிலைநிறுத்திக் கொண்டேன், கடினமாக உழைத்தேன், அனைத்தையும் கையாண்டேன். என்னால்தான் என் சகோதர சகோதரிகளுக்கு திருமணம் நடந்தது. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
View this post on Instagram
பெரும்பாலான நடிகைகள் தங்கள் முதல் படங்களில், அனைத்து நடிகைகளும் சல்வார்-சூட் அணிந்து பக்கத்து வீட்டுப் பெண்களைப் போல நடிப்பார்கள். தனது இரண்டாவது படத்திலேயே டூ பீஸ் (ஆடை) அணிந்து, ‘எனக்கும் கவர்ச்சி இருக்கிறது, எனக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்பார்கள். அவர்களின் முதல் படம் தோல்வியடைந்தாலும், அவர்கள் டூ பீஸ் அணிந்த தருணத்தில், அவர்கள் அத்தகைய நேரத்தில் வெற்றி பெறுகின்றன. எங்கள் அப்பாவோ தாத்தாவோ பாலிவுட் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல. எங்கே போவோம்? நாங்கள் போராடிதான் வாய்ப்பு பெற வேண்டும்.
நான் பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பணியாற்றி வருகிறேன். ஆனால் எனது படத்தை வைத்து பார்த்தால் பலாத்கார காட்சிகள் மட்டுமே கிடைக்கும். அது நான் செய்ய விரும்பாத ஒன்று. முத்தக் காட்சிகள், பலாத்காரக் காட்சிகள், நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? எனக்கு அந்த அளவுக்கு நல்ல நடனத் திறமை இருக்கிறது. பல ஐட்டம் பாடல்கள் செய்துள்ளேன். நான் நல்ல நடிகை. எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள். எனக்கு அங்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் தான் மீடியாக்கள் முன் நடிக்கிறேன். மீடியாக்களுக்கு முன்னால் நான் இதைச் செய்யக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், எனக்கு நல்ல பாத்திரங்களை வழங்குங்கள். நான் தயார். மற்ற நடிகைகளைப் போல எனக்கும் நேர்மையான, நல்ல பாத்திரங்களைத் தாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்