மேலும் அறிய

Rajiv Menon: விடுதலை படத்துக்குப் பின் வலுவான கதாபாத்திரம்.. வெப்பன் படம் பற்றி ராஜீவ் மேனன் பளிச்!

Rajiv Menon: இந்தக் கதாபாத்திரத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும் என ராஜீவ் மேனன் பகிர்ந்துள்ளார்.

வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 படத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்று கவனமீர்த்தார். இப்போது சத்யராஜ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘வெப்பன்’ திரைப்படத்தில் தனித்துவமான பர்ஃபாமன்ஸை தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சத்யராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

“இயக்குநர் குகன் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இவற்றையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்தக் கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில், இந்தக் கதாபாத்திரத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். கதை மிகவும் உறுதியானதாக இருக்கும்போது நடிகர்களின் நடிப்புத் திறன் இன்னும் சிறப்பாக வெளிப்படும் என்பதை ‘வெப்பன்’ நிரூபித்துள்ளது. புதிய கால தொழில்நுட்பத்துடன் ஏஐ டெக்னாலஜியை சரியாக உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. ’வெப்பன்’ பார்வையாளர்களுக்கு உற்சாகமான மெய்சிலிர்க்க வைக்கும் பல தருணங்களைக் கொண்டுள்ளது. ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் மில்லியன் ஸ்டுடியோ படத்தைத் தயாரித்துள்ளது. ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல் மற்றும் ஆக்‌ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார். வெப்பன் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இளம் வயது சத்யராஜை கிராஃபிக்ஸில் படக்குழு உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான வெப்பன் படத்தின் ட்ரெய்லர், டீசர் என ஆகியவை எதிர்பார்ப்புகளை எகிறவைத்த நிலையில், வரும் ஜீன் 7ஆம் தேதி வெப்பன் படம் ரிலீசாகிறது.

மேலும் படிக்க: Garudan Movie Review: சூரியின் மாஸ் ஆக்சன்.. பக்கா கமர்ஷியல் கதையில் ஹீரோவாக ஜெயித்தாரா.. கருடன் பட விமர்சனம்!

PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget