Rajinikanth: காரில் ஜாலியாக ட்ரிப்.. செல்ஃபி வீடியோ எடுத்து அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி.. இணையத்தில் ட்ரெண்டிங்..!
நடிகர் ரஜினிகாந்த் காரில் தன் நண்பருடன் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
![Rajinikanth: காரில் ஜாலியாக ட்ரிப்.. செல்ஃபி வீடியோ எடுத்து அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி.. இணையத்தில் ட்ரெண்டிங்..! Rajinikanth’s selfie video from open car goes viral Rajinikanth: காரில் ஜாலியாக ட்ரிப்.. செல்ஃபி வீடியோ எடுத்து அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி.. இணையத்தில் ட்ரெண்டிங்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/01/1c4a904fd0d1e277dce726293b526cc01696164269640572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் ரஜினிகாந்த் காரில் தன் நண்பருடன் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் 72 வயதிலும் சினிமா உலகில் நம்பர் 1 நடிகராக உள்ளார். ரசிகர்களுக்கு எந்த மாதிரியான எண்டர்டெயின்மெண்ட் தேவை என்பதை ரஜினி படங்களை பார்த்தாலே புரிந்து விடும். மேலும் ஆன்மீகத்திலும் அதிகம் நாட்டம் கொண்ட ரஜினி ரசிகர்களுக்கு முன்மாதிரியாகவே திகழ்கிறார். இப்படியான நிலையில் அவரின் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் வர்மா, தமன்னா, சுனில் குமார், மிர்னா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். இந்த படம் உலகளவில் ரூ.600 கோடி வரை வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது. இது ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Rare Selfie Video of #Thalaivar❤️❤️🙏#Jailer #Thalaivar #Rajinikanth #Thalaivar171 #Thalaivar170 pic.twitter.com/OuC2JBKxE6
— ONLINE RAJINI FANS🤘 (@OnlineRajiniFC) September 29, 2023
இப்படியான நிலையில் அவர் அடுத்ததாக மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குநர் டி.கே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த், தனது நண்பருடன் திறந்தவெளியில் கார் ஓட்டி மகிழ்ந்த செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சாலையில் பயணிக்கும் ரஜினி, மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 .. அடுத்தடுத்து வந்திறங்க போகும் போட்டியாளர்கள்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)