மேலும் அறிய

கட்டா குஸ்தி 2 பார்த்து ரஜினிகாந்த் பாராட்டு!

விஷ்ணு விஷால் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் . இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் ₹15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அந்த படம், உலகம் முழுவதும் ₹30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து விஷ்ணு விஷாலின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. முதல் 10 நாட்களில் உலகளவில் ₹44 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்திற்குப் பிறகும் இருவருக்கும் நல்ல நட்புறவு தொடரும் நிலையில், 'கட்டா குஸ்தி 2' படத்தை பார்த்து ரஜினிகாந்த் தெரிவித்துள்ள பாராட்டு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு ரஜினி பாராட்டு

விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், "செம்ம படம். ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இந்த மாதிரி படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை. ரொம்ப நல்லா நடித்திருக்கிறீர்கள். ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் அருமையாக நடித்திருக்கிறார். குட்டி சாராவை எப்படி கண்டுபிடித்தீர்கள்? அவர் பிரில்லியண்ட். விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கிறது. இன்னும் நிறைய நல்ல படங்களைக் கொடுங்கள்" என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாராட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், 'கட்டா குஸ்தி 2' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது Vishnu Vishal Studioz நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தை Ravi Teja Team Works நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget