Coolie Box Office: எல்லா ஹேட்டர்ஸ் ஓரம் போங்க.. பாக்ஸ் ஆஃபிஸ் கிங் கூலி.. வசூல் எவ்வளவு தெரியுமா?
ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், செளபின் சாஹிர், ரச்சிதா ராம், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படம் முழுக்க வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் கூலி திரைப்படம் வசூல் படைத்து வருகிறது.
கூலி படம் வெளியான நாள் முதலே ரஜினிகாந்த் குறித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்தும் சினிமா விமர்சகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக படத்தில் கதை இல்லை அதீத வன்முறைதான் வெறுப்பை தட்டுகிறது என்றே பலரது புகாராக இருக்கிறது. இப்படத்தில் சத்யராஜ் கதாப்பாத்திரம் பெரிதளவில் மனதை கவரவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் இடம்பெறும் பழைய பாடல்களை வைத்து பழைய டெம்ப்ளேட்டில் லோகேஷ் கதையை நகர்த்துகிறார் என்றும் விமர்சனம் செய்தார்கள்.
மேலும், இந்த படத்தை எடுப்பதற்குத்தான் 2 வருடங்களை வீணடித்தாரா. இதைத்தான் அனைத்து பேட்டிகளிலும் எழுதியிருக்கிறேன். எழுதியிருக்கிறேன் என்று சொன்னார் போல என்றும் கமாண்ட் அடித்தும் வருகின்றனர். மேலும், பெரிய பட்ஜெட்டில் ஒரு பெரும் நடிகரின் படம் வெளியானால் அந்த படம் சரியில்லை என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அவை, ரஜினி, விஜய் மட்டும் அல்ல அனைத்து நடிகர்களும் பொருந்துவார்கள் என கூலி படத்திற்கான ஆதரவு குரலும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்களிடம் கூலி படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் குறையவில்லை. மீண்டும் மீண்டும் படத்தை பார்த்து வருகிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.
ஹேட்டர்ஸ்கள் அதிகம் இருந்தாலும் கூலி திரைப்படம் படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கூலி திரைப்படம் சுமார் 404 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆல் ஏரியாவிலும் கூலி தான் கிங் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். அதுபோலவே கூலி படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Karangal Osarattumey!🙌🏻💥 #Coolie Rule is unstoppable! 😎#Coolie becomes the Highest worldwide gross collection in the history of Tamil Cinema with 404+ crores in just 4 days! 🔥⚡#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan… pic.twitter.com/VMeITJCpnc
— Sun Pictures (@sunpictures) August 18, 2025





















