மேலும் அறிய

V A Durai: மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் தயாரிப்பாளர் வி.ஏ.துரை... உதவுவதாக உறுதியளித்த நடிகர் ரஜினிகாந்த்!

வி.ஏ.துரையை செல்ஃபோனில் அழைத்து நான் பார்த்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீரிழவு நோயால் கால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. எவர் க்ரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டு ‘என்னம்மா கண்ணு’, ‘லூட்டி’ உள்ளிட்ட பல படங்களை வி.ஏ. துரை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக தயாரிப்பாளர் துரை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிகிச்சை பெறக்கூட பணமின்றி துரை அவதிப்பட்டு வருவதாகவும் கடந்த சில நாள்களுக்கு முன் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது.

முன்னதாக சினிமா மோகத்தால் தன் சொத்துகள் முழுவதையும் இழந்ததாகவும், சிறு வடுவாகத் தோன்றியது இன்று இப்படி வளர்ந்திருப்பதாகவும் துரை நேர்காணல் ஒன்றில் வருந்தியிருந்தார். இயக்குநர் பாலா தன்னிடம் 25 லட்ச ரூபாய் பணம் வாங்கிவிட்டு பணமே வாங்கவில்லை எனக்கூறியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவுமாறும் முன்னதாக வி.ஏ.துரை சார்பில் இந்த வீடியோவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நடிகர் ரஜினியுடன் 25 படங்களில் உதவி , இணை இயக்குநராக வி.ஏ.துரை பணியாற்றியதுடன்,பாபா படத்தில் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் துரை வேலை செய்துள்ளார். ரஜினியுடன் இவர் நல்ல நட்பைக் கொண்டிருந்த நிலையில், முன்னதாக ரஜினியிடம் இவருக்காக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னதாக வி.ஏ.துரையை செல்ஃபோனில் அழைத்து நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் வந்து பார்ப்பதாக ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பிதாமகன் படத்தைத் தயாரித்த வி.ஏ.துரையின் நிலையை அறிந்து நடிகர் சூர்யா இரண்டு லட்ச ரூபாயும், நடிகர் கருணாஸ் 50000 ரூபாய் பண உதவி செய்ததாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது.

மேலும் முன்னதாக இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பற்றி வீடு திரும்பியதாகவும், இருப்பினும் தன் அன்றாட செலவுகளுக்கு வி.ஏ.துரை அவதிப்பட்டு வருவதாகவும் முன்னதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget