அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹ்ரித்திக் ரோஷன் 40 ஆண்டுகளுக்குப் பின் அவருடன் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்

1986-ம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ இந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ஹ்ரித்திக் ரோஷன், தற்போது சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தில் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. முந்தைய பாகத்தில் கேமியோ ரோலில் வந்த மோகன்லால் , ஷிவராஜ்குமார் இந்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களுடம் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி திரையில் இணைந்துள்ளதை ரசிகர்கள் ஆர்வாரம் செய்து வரவேற்று வருகிறார்கள்.
40 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த ரஜினி ஹ்ரித்திக் ரோஷன்
ஜெ. ஓம் பிரகாஷ் இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ படத்தில் ரஜினிகாந்த், ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருந்தார். அப்போது சிறுவனாக இருந்த ஹ்ரித்திக், தனது தாத்தாவான இயக்குநர் ஜெ. ஓம் பிரகாஷ் இயக்கிய இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகத் திரையில் தோன்றினார்.
தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியின் படத்தில் கேமியோ ரோலில் வந்து அசத்தியுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். ஜெயிலர் 2 படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த காட்சிகளில் ஒன்றாக ஹ்ரித்திக் ரோஷனின் காட்சிகள் அமைந்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















