'முதலில் துப்பட்டாவை போடுங்கள்'னு சொன்ன நெட்டிசன்ஸ்.. நறுக்கென பதிலளித்த ரைசா!

போலியான அக்கவுண்ட்டில் இருந்து வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடுபவர்களை கண்டுகொள்வதில்லை என ரைசா தெரிவித்துள்ளார். முகத்திற்கு நேராக பேசாமல் இப்படி கமெண்ட்ஸ் அளிப்பது வருத்தப்பட வைப்பதாகவும் கூறியுள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவுக்கு நுழைந்தவர் நடிகை ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த புகழின் காரணமாக யுவன் தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹரீஸ் கல்யாணுடன் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தமிழில் சில படங்களில் ஹீரோயினாக கமிட்டானார் ரைசா. இவரது நடிப்பில் தற்போது 'சேஸ்' திரைப்படம் ரிலீஸாக காத்திருக்கிறது. 

முதலில் துப்பட்டாவை போடுங்கள்'னு சொன்ன நெட்டிசன்ஸ்.. நறுக்கென பதிலளித்த ரைசா!
மேலும், ரைசா சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோஸ் போடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். தான், எங்கேயாவது சென்றால் அங்கே இருக்கும் சூழலையும் ரைசா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிடுவார். இவருக்கு என சில ரசிகர்கள் கூட்டம் சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது இவர் முக அறுவை சிகிச்சை செய்த நிலையில் இதனால் சில பாதிப்புகளுக்கு உள்ளானர் ரைசா. இது தொடர்பாக ரைசா வழக்குப் பதிவும் செய்திருந்தார். மேலும், ஒரு கோடி ரூபாய் வரைக்கும் நஷ்ட ஈடும் ரைசா கேட்டிருந்தார். ரைசாவின் முகம் எப்போதும் சரியாகும் என இவருடைய ரசிகர்களும் காத்திருந்தனர். இதற்கு இடையில கடந்த வாரத்தில் பழைய அழகிய முகத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் ரைசா வெளியிட்டிருந்தார். இதற்கு பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ் அளித்து வந்தனர். தொடர்ந்து,  ரைசா தன்னுடைய பழைய அழகுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். எப்போதும் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களை பதிவு செய்யும் ரைசா பிகினி உடையில் இருக்கும் படங்களையும் பதிவு செய்து வருவதும் வழக்கம். இதே போல் சில தினங்களுக்கு முன்பு இவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்துக்கு பலரிடமிருந்து சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கியது. 

முதலில் துப்பட்டாவை போடுங்கள்'னு சொன்ன நெட்டிசன்ஸ்.. நறுக்கென பதிலளித்த ரைசா!

''முதலில் துப்பட்டாவை போடுங்கள் என்றார்கள். பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு தரக்குறைவாக நடந்து கொள்வதா என்று ரீதியில் கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர். இதை கவனித்த ரைசா இவர்களுக்கு தகுந்த பதில்களையும் வெளியிட்டார். மேலும், என்னுடைய புகைப்படங்கள் பிடிக்கவில்லை என்றால், 'எனை பின் தொடர வேண்டாம்' எனவும் கூறியிருந்தார். போட்டோ போடுவது எனக்கு பிடித்த செயல் என்ற ரீதியில் ரைசாவின் பதில்கள் இருந்தன. 

மேலும், ரைசாவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது போலவே சில பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்திருந்தன. இதற்காக சந்தோஷப்பட்ட ரைசா போலியான அக்கவுண்ட்டில் இருந்து வரும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் போன்றவங்களை கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்திருந்தார். முகத்திற்கு நேராக பேசமால் இப்படி கமெண்ட்ஸ் அளிப்பது வருத்தப்பட வைப்பதாகவும் கூறியிருந்தார். இன்று என்னை தரகுறைவாக பேசுபவர்கள் நாளைக்கு மற்றொரு நபரை பேசுவார்கள் எனவும் ரைசா வில்சன் கூறியுள்ளார்.

Tags: Instagram Raiza photo shoot commands

தொடர்புடைய செய்திகள்

Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!

Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!

சைஸ் கேட்ட நபருக்கு, பார்வதி நாயரின் அதிரடி பதில் : லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

சைஸ் கேட்ட நபருக்கு, பார்வதி நாயரின் அதிரடி பதில் : லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

Maanadu Update | மாநாடு அறிவிக்கிறார் யுவன்! புதன் கிழமை வெளியாகும் என தகவல்!

‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!

‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!

Netrikann | ரெடியா இருங்க பாசு.... நாளை காலை வருகிறார் நயன்தாரா!

Netrikann | ரெடியா இருங்க பாசு.... நாளை காலை வருகிறார் நயன்தாரா!

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: 18ஆவது நாளாக கொரோனா தொற்று குறைவு

Tamil Nadu Corona LIVE:  18ஆவது நாளாக கொரோனா தொற்று குறைவு

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

காவல் நிலையம் ‛பார்’ ஆனது; பிடிபட்ட சரக்கு ‛சேல்’ ஆனது; மொத்த ஸ்டேஷனும் சஸ்பென்ட்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!