பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்திற்கும், LCU பிரபஞ்சத்திற்கும் தொடர்புள்ளது என நடிகர் நிவின் பாலி பேச்சு

மாநகரம் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் நடிப்பில் மாஸ்டர், லியோ, உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி, கார்த்தி நடிப்பில் கைதி என இஅவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வசூல் சாதனை படைத்தன.
குறிப்பாக லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்டை உருவாக்கி அதன் கீழ் இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அண்த வரிசையில் அடுத்தப்படியாக கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பியது. இதற்கிடையில், லோகேஷ் நடிப்பில் வெளியான DC என்ற படமும் மாபெரும் வெற்றிப் பெற்றது. இதன்மூலம், இயக்குனராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் அவர் முத்திரை பதித்தார்.
தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் இணைந்து ரவி மோகன், மாதவன், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் வில்லனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி நடிக்கிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நிவின் பாலி, "பென்ஸ் திரைப்படம் பற்றி என்னால் முழுமையாக கூற முடியாது, ஆனால் இத்திரைப்படம் LCU-வுடன் தொடர்புடையது, இதில் வரும் கதாப்பாத்திரங்கள் அவற்றுடன் தொடர்புடையவை” இவ்வாறு கூறினார். மேலும், தான் LCU-வில் வரும் டில்லி, ரோலக்ஸ் உள்ளிட்ட கதாப்பாத்திரங்களின் தீவிர ரசிகன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விக்ரம், லியோ படங்களின் வெற்றிக்கு பிறகு LCU தொடர்புடைய படங்களை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்துக்கிடந்த நிலையில், அடுத்தப்படியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய கூலி திரைப்ப்டம் LCU பிரபஞ்சத்தின் கீழ் வராததும், அதற்கடுத்து அவர் தற்போது இயக்கி வரும் அல்லு அர்ஜூனின் படமும் முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களம் கொண்டது என்பதால் LCU ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
LCU பிரபஞ்சத்தில் தொடர்புடைய படங்களான கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் ஆகிய படங்கள் குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.
இதற்கிடையே, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்திற்கும், LCU பிரபஞ்சத்திற்கும் தொடர்புள்ளது என நடிகர் நிவின் பாலி சொல்லிய சீக்ரெட்டால் LCU ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால், பென்ஸ் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















