Raayan Release Date: ராயன் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. முதல் பாடலுடன் போனஸ் அப்டேட் தந்த தனுஷ்!
Dhanush Raayan Release Date: தனுஷ் நடித்துள்ள ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராயன்
தனுஷின் 50ஆவது படமாக உருவாகியிருக்கிறது ராயன். இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சன் பிச்சர்ஸ் தயாரித்து ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராயன் படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் போனசாக படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது படக்குழு.
ராயன் ரிலீஸ் தேதி
#AdangaathaAsuran oda aattam aarambam! 🔥 #RaayanFirstSingle out now
— Sun Pictures (@sunpictures) May 9, 2024
▶️ https://t.co/6HTN06vcZD#Raayan in cinemas from June 2024!@dhanushkraja @arrahman @PDdancing @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2… pic.twitter.com/627G40cokx
தற்போது ராயன் படத்தின் முதல் பாடலான ‘அடங்காத அசுரன்’ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலுடன் ராயன் படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி, வரும் ஜூன் 13ஆம் தேதி ராயன் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.