Raayan: எதிர்பார்ப்பை எகிற வைத்த ராயன் படம்! தனுஷ் உடன் கைகோர்க்கும் சூர்யா பட நாயகி - அடடே!
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Raayan: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ராயன் படம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் ராயன் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா எடிட்டிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் ராயன் படம் இந்தாண்டே திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் படத்தில் அபர்ணா பாலமுரளிதரன்:
இந்நிலையில் படத்தில் நடித்துள்ளவர்கள் யார் யார் என்ற விபரத்தை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தினமும் ஒருவரை அறிமுகம் செய்து வருகின்றது. இதில் ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர் என படக்குழு தெரிவித்திருந்தது.
Introducing @Aparnabala2 from the world of #Raayan 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @prakashraaj @officialdushara @kalidas700 @sundeepkishan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss pic.twitter.com/RtorQUZ1lr
— Sun Pictures (@sunpictures) February 25, 2024
இந்நிலையில் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் என இன்றைய அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலையான நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ’8 தோட்டாக்கள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ’சூரரைப் போற்று' படத்தில் நடித்து பிரபலமானார்.
இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். இவர் கடைசியாக ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ’வீட்ல விசேஷம்' படத்தில் நடித்திருந்தார்.
வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















