Rashmika Mandanna: மனதை கொள்ளைக் கொள்ளும் ராஷ்மிகாவின் சின்ன வயது போட்டோ...ஆச்சரியப்படும் ரசிகர்கள்
தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு சலோ என்ற படத்தில் அறிமுகமானாலும், விஜய் தேவரகெண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் தான் அனைத்து மொழிகளிலும் அவருக்கான ரசிகர்களை உருவாக்கியது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 பிறந்த ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு வெளியாகி அதே ஆண்டில் கன்னடத்தில் அதிக வசூல் சாதனைப் படைத்த கிரிக்கி பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் நடித்ததற்காக அறிமுக நடிகைக்கான சைமா விருதை அவர் வென்றார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் தொடர்ந்து அஞ்சானி புத்ரா படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
View this post on Instagram
அதன்பின்னர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு சலோ என்ற படத்தில் அறிமுகமானாலும், விஜய் தேவரகெண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் தான் அனைத்து மொழிகளிலும் அவருக்கான ரசிகர்களை உருவாக்கியது. கிரிக்கி பார்ட்டி படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான ரக்ஷித் ஷெட்டியை காதலித்த அவர் நிச்சயதார்த்தமும் செய்தார். ஆனால் கீதா கோவிந்தம் படம் ராஷ்மிகாவை புகழின் உச்சத்தில் நிறுத்தியது.
இதன்பின்னர் கடந்தாண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் மூலம் அறிமுகமான ராஷ்மிகா தனது அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு மேலும் ஒரு ஹிட்டாக அமைந்ததால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக அமிதாப்பச்சனுடன் அவர் நடித்துள்ள குட்பாய் திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகாவின் சின்ன வயது போட்டோ ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
View this post on Instagram
கடந்தாண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடும் அவர், எனது வித்தியாசமான வெளிப்பாடுகளை மன்னியுங்கள், ஆனால் நான் நடனமாடிய பாடலை யூகிக்கலாமா? என கேட்டுள்ளார். இது 2004, 2005 காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்ப தேவதை வம்சம் தான் போல உள்ளிட்ட பல அழகை வர்ணித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.