நடுக்கடலில் கர்ணனுக்கு பேனர் வைத்த புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள்..
இயக்குநர் மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படம் இன்று வெளியாவதையொட்டி, நேற்று நடுக்கடலில் கர்ணனுக்கு பேனர் வைத்தனர் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள்.
தாணு தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் இன்று வெளியாவதையொட்டி, நேற்று நடுக்கடலில் கர்ணனுக்கு பேனர் வைத்தனர் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள்.
கொரோனா பரவலையொட்டி திரையரங்குகளில் 50% மட்டும் நிரப்பப்படவேண்டும் என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. தயாரிப்பாளர் தாணு இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் இன்று வெளியாகும் எனவும், அனைவரும் பாதுகாப்புடன் வந்து ஆதரவு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘கர்ணன்’ இன்று வெளியாவதால் தனுஷின் புதுச்சேரி ரசிகர்கள் நடுக்கடலில் படகில் சென்று ‘கர்ணன்’ கட் அவுட்டை வைத்து ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Pondicherry @dhanushkraja Fans 💥💥 #KarnanFromTomorrow #Karnan pic.twitter.com/ozoilrfoXR
— Dhanush Trends™ (@Dhanush_Trends) April 8, 2021

ரசிகர்கள் இதை கொண்டாட்ட மனநிலையுடன் அணுகினாலும், கடலோர மக்கள் இதை ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நடுக்கடல் பேனர் கலாச்சாரத்தை அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.