மேலும் அறிய
Advertisement
‘நான் நடிக்கும் படத்தில் நடந்தது போல இந்த உயிரிழப்பு நடந்துள்ளது’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்
பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தை நேரில் சந்தித்து, நான் நடிக்கும் திரைப்படத்தில் நடந்தது போல இந்த உயிரிழப்பு நடந்துள்ளது என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் கூறினார்.
பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தை நேரில் சந்தித்து, நான் நடிக்கும் திரைப்படத்தில் நடந்தது போல இந்த உயிரிழப்பு நடந்துள்ளது என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் கூறினார்.
பண்ருட்டியில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகே உள்ள புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி வீரரான இவர் சில நாட்களுக்கு முன்பு கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது ஆடுகளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியாக ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து கபடி வீரர் விமல்ராஜ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தற்போது நான் நடித்து வெளிவரவுள்ள திரைப்படத்தில் வரும் காட்சியை போன்றே விமல்ராஜ் உயிரிழப்பு நடந்துள்ளதாகவும், நாடே ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இழந்துள்ளதாகவும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்திக்கும் போது இதுதொடர்பாக பேசுவேன் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது யுவர் பேக்கர்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion