மேலும் அறிய

Kanthaswamy: சின்ன முடிவால் ஓடாமல் போன விக்ரமின் கந்தசாமி படம்.. காரணத்தைப் பகிர்ந்த தயாரிப்பாளர் தாணு!

Kanthaswamy Movie: பல கோடி செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் கந்தசாமி படம் வரவேற்பைப் பெறாமல் போனது.

“விக்ரம் நடித்த 'கந்தசாமி' படம் மலைக்கள்ளன் மாதிரி வரவேண்டியது. அந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் இதுதான்” என நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். 

கடந்த 2009ஆம் ஆண்டு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான படம் ‘கந்தசாமி’. சுசிகணேசன் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரேயா, ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, கிருஷ்ணா, வடிவேலு எனப் பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. பல கோடி செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் கந்தசாமி படம் வரவேற்பை பெறாமல் போனது. இந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் விக்ரம் பாடியிருந்தார். 

ஏன் கந்தசாமி படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதை நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் தாணு சொல்லியிருந்தார்.  அதாவது, “கந்தசாமி படம் மிஸ்ஸாகவில்லை. அது ஜெயிக்க தான் செய்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் 10 நிமிடம் இருந்தது. நான் சுசிகணேசனிடம், “படம் பார்க்க வர்றவங்க வீட்டுல இருந்து வர, படம் முடிச்சி போக என ஒரு மணி நேரம், இண்டர்வெலுக்கு 15 நிமிடம், இதைத்தவிர படத்தின் நேரம் எல்லாம் பார்த்தால் சுமார் 5 மணி நேரம் செலவிட வேண்டியதாக உள்ளது. படம் பார்க்க வருகிறவர்களை சீட்டில் உட்கார வைக்க வேண்டுமே தவிர, எந்த இடத்திலும் நேரமாகி விட்டது என நினைக்க கூடாது. அதனால் படத்தில் அரைமணி நேர காட்சியை கூட நீக்கி விடு. நீ இரண்டு மணி நேரம் 30 நிமிடம் வரும்படி படத்தை வைத்தால் போதும்” என சொன்னேன். 

அதற்கு சுசிகணேசன் என்னிடம், “இல்லண்ணே.. லகான் படம் எல்லாம் 3 மணி நேரம் போச்சு. நீங்க பண்ணி கொடுங்க” எனக் கூறினார். இதனையடுத்து நான், “கந்தசாமி படம் நீளமாக இருக்கிறது என கருத்து வந்தால் படத்துக்கான மதிப்பு குறையும்.  மலைக்கள்ளன் மாதிரி வரவேண்டிய படத்தை உனக்காக விட்டுக் கொடுக்கிறேன். இதன் முடிவு எப்படி இருக்கும் என்றால் ஹீரோவை தேடி தயாரிப்பாளர்களும், தயாரிப்பாளரை தேடி ஹீரோக்களும் வருவார்கள். ஆனால் உன்னைத் தேடி வருபவர்கள் எண்ணிக்கை குறையும்” எனக் கூறினேன்.

அதேசமயம் விக்ரமின் கேரியரில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படம் கந்தசாமி. ட்ரெய்லருக்கு மட்டும் ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டது. கந்தசாமி பட ட்ரெய்லர் வட இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்தது. படத்துக்கு என்ன வியாபாரம் நடந்ததோ அது அப்படியே செலவாச்சு” என்று அந்தப் பேட்டியில் தாணு தெரிவித்திருந்தார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல்...இது வாழ்த்தா வஞ்சமா? ஜெயிலர் 2 பற்றி அல்லு அர்ஜூன் பதிவால் சர்ச்சை
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல்...இது வாழ்த்தா வஞ்சமா? ஜெயிலர் 2 பற்றி அல்லு அர்ஜூன் பதிவால் சர்ச்சை
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்துடன் சம்பந்தம்..பிரபலங்களின் செல்வாக்கு..யார் இந்த கண்ணன் ரவி?
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்துடன் சம்பந்தம்..பிரபலங்களின் செல்வாக்கு..யார் இந்த கண்ணன் ரவி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
Embed widget