மேலும் அறிய

Priyanka Chopra : பாலிவுட்டில் நிற வேறுபாடு... ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களில் இப்படி இருந்தேன்... ப்ரியங்கா சோப்ரா வேதனை!

இளம்பெண்களை தாங்கள் அழகாக இருந்தால் மட்டுமே சிறந்த எதிர்காலம் இருக்கும் என நம்பவைத்த மோசமான ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களின் ஒரு பகுதியாக தான் இருந்ததற்கு கவலை தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

தனது திரை வாழ்வின் தொடக்க காலத்தில் ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களில் நடித்தது குறித்து வருந்தியும், பாலிவுட்டில் நிலவும் நிற வேறுபாடு குறித்தும் நடிகை பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

2000ஆம் ஆண்டு ’மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா, ’தமிழன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார்.  தொடர்ந்து பாலிவுட்டில் ’லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை’ படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு பிரியங்கா அறிமுகமானார்.

ஆனால் மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை தன் நிறத்துக்காகவும் தோற்றத்துக்காகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.  எந்தவித சினிமா பின்னனியுமின்றி பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின் நாள்களில் பாலிவுட்டுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொண்டு ஹிட் படங்களை வழங்கத் தொடங்கினார்.

இந்நிலையில், தனது தொடக்க கால திரைவாழ்வில் ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களில் நடித்தது குறித்து தற்போது பிரியங்கா வருத்தம் தெரிவித்துள்ளார். நிற வேறுபாடுகளை பாலிவுட்டில் தான் சந்தித்த நிலையில், தான் பலமுறை லைட்டன் செய்து தனது நிறத்தை மாற்றிக் கொண்டது குறித்தும் பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். 

மேலும், தனது கரியர் ஆரம்ப நாள்களில், ”இளம் பெண்கள் அழகாக இருந்தால் மட்டுமே சிறந்த எதிர்காலம் இருக்கும்” என நம்பவைத்த மோசமான ஃபேர்னெஸ் க்ரீம் விளம்பரங்களின் ஒரு பகுதியாக தான் இருந்ததற்கும் கவலை தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

ஆனால் அதன் பிறகு பாலிவுட் திரையுலகம் மாறி விட்டதாகவும், குறிப்பாக சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் நிகழ்துள்ளதாகவும் பிரியங்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய பிரியங்கா சோப்ரா "நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் ​​நீங்கள் வெள்ளைத் தோல் உடையவராக இருந்தால், உங்களுக்கு வெற்றிக்கும் நீங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்கும் உத்தரவாதம் இருக்கும், ஆனால் நீங்கள் கருப்பானவராக இருந்தால்  கதையே வேறு... நான் எனது தோல் நிறத்தை பல முறை லைட்டன் (skin lightening) செய்துள்ளேன்

நான் இத்தகைய விளம்பரங்களில் நடித்துள்ளேன், நான் கருப்பாக இருக்கும்போது பூ விற்கும் நபர் என்னிடம் வரமாட்டார், என்னை கண்டுகொள்ளமாட்டார், ஆனால் நான் குறிப்பிட்ட க்ரீமை பயன்படுத்தத் தொடங்கியதும் எனக்கு வேலை கிடைக்கிறது, எனக்கு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறார். என் கனவுகள் அனைத்தும் நனவாகும். இத்தகைய விளம்பரங்களில் நானும் சிக்கிக் கொண்டேன்” என பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். 

பிரியங்கா சோப்ரா நடிப்பில் பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள சீட்ட்டல் தொடர் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கி அமேசான் ப்ரைம் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget