மேலும் அறிய

அற்புதமான இந்து மதம்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நிக் ஜோனஸ் நெகிழ்ச்சி!

ஹாலிவுட்டின் பிரபல பாடகரான நிக் ஜோனஸூம், நடிகை பிரியங்கா சோப்ராவும் கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இந்த நிலையில் இந்து மதம் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு கொண்டுள்ளதாக நிக் கூறியுள்ளார்.

இந்து மதம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக பிரபல பாடகரும், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவருமான நிக் ஜோனஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் கருத்துக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

ஹாலிவுட்டின் பிரபல பாடகரான நிக் ஜோனஸூம், நடிகை பிரியங்கா சோப்ராவும் கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நிக்கை விட பிரியங்கா சோப்ரா 10 வயது மூத்தவர் என்ற நிலையில் இவர்கள் மகிழ்ச்சியான தம்பதியினராக வலம் வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2022ம் ஆண்டு மால்டி மேரி என்ற மகள் பிறந்தார். அமெரிக்காவில் வசித்தாலும் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியினர் தொடர்ச்சியாக இந்திய பண்டிகைகளையும் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி தீபாவளி, ஹோலி பண்டிகைகளை கொண்டாடும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில் நேர்காணலில் ஒன்றில் பேசிய நிக் ஜோனஸ், இந்தியாவின் மரபுகளைகளையும், சடங்குகளையும் நேரடியாக அனுபவிப்பதால் தான் என்னென்ன மாற்றங்களை அனுபவித்தேன் என்றும், இதனால் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, “நான் முதன்முறையாக இந்தியா வந்தபோது பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டேன். அன்று முதலே இந்தியாவுக்கும் எனக்குமான பிணைப்பு தொடங்கி விட்டது. இந்த காலக்கட்டம் பிரியங்காவின் கலாச்சாரத்தை அர்த்தமுள்ள முறையில் அனுபவிக்கவும், அது ஒரு மாயஜால நிகழ்வாகவும் இருந்தது. உண்மையில் வாழ்க்கையில் எனக்கு பிடித்த சில நினைவுகள் இந்தியாவைச் சார்ந்தவையாக உள்ளது. இது என்னால் நம்ப முடியாத ஒன்று” என தெரிவித்துள்ளார். 

இந்து மதத்தின் மீது எனக்கு ஆழ்ந்த பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அது மிகவும் அழகானது. இந்து மதத்தைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. இந்து மத்தில் சொல்லப்படும் கர்மாவின் நடைமுறை கோட்பாடு என்னை நிறைய பாதித்துள்ளது. நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால் அது நமக்கு திரும்பி வரும்,கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்ற கோட்பாடு மிகவும் பிடிக்கும். இந்திய பண்டிகைகளும் மரபுகளும் இப்போது நம் வீட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. நாங்கள் எங்களின் மகள் மால்டி மேரியை உண்மையான இந்து மதத்தின் நடைமுறைகளுடன் வளர்க்கிறோம். அதன் அர்த்தத்தை அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம். இந்த பன்முக கலாச்சாரத்தை கொண்ட குடும்பத்தைக் கண்டுபிடித்தது என் அதிர்ஷ்டம்” என நிக் ஜோனஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget