மேலும் அறிய

pirithviraj |”முல்லை பெரியாறு அணையை கைவிடு “ - பிரபல நடிகர் பிரித்திவிராஜ் ட்வீட்டால் சர்ச்சை!

#DecommisionMullaperiyarDam என்ற முன்னெடுப்பின் மூலம்  கேரள நெட்டிசன்கள் முல்லை பெரியாறு அணையை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையிலிருந்து கிடைக்கும் தண்ணீரின் மூலம்  தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி ஆகும். 15.5 டி.எம்.சி தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும்.


தற்போது கேரள மாநிலம் மற்றும் முல்லைப்பெரியாறு, தேக்கடி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர் மட்டம் பல அடி வேகமாக உயர்ந்ததுவிட்டது. பல ஆண்டுகளாகவே முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருவது நாம் அறிந்ததே!.  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சித்து வரும் சூழலில், கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் கேரள அரசோ பழமையான முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் , அணை உடைந்தால் பல லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பார்கள் என்கிறது.  உண்மையில் முல்லை பெரியாறு அணையை இடிக்க தேவையில்லை, பராமரிப்பு பணிகள் மட்டுமே போதுமானது என்கிறது தமிழக அரசு. இது குறித்த வழக்குகளும் ஆய்வுகளும் நடைப்பெற்று வருகின்றன.


ஒவ்வொரு ஆண்டும் பெருமழை காலத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினை பூதாகரமாக வெடிப்பது வழக்கம் அந்த வகையில்  #DecommisionMullaperiyarDam என்ற முன்னெடுப்பின் மூலம்  கேரள நெட்டிசன்கள் முல்லை பெரியாறு அணையை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான பிரித்திவிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், என்னவாக இருந்தாலும் 125 வருட பழமையான அணையின் தற்போதைய கட்டமைப்பு  செயல்படும் வகையில் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கிவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது! “ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு கீழே தமிழக நெட்டிசன்கள்  “முல்லைப்பெரியாரை விட கேரளாவில் பலவீனமான எத்தனையோ அணைகள் உண்டுனு கேள்விப்பட்டிருக்கேன், கேரள நிலப்பகுதிகளே பலவீனமாக இருப்பது வேறு விஷயம்.. இடுக்கியே ஒரு ஹைட்ரொ பாம்னு அதன் மேல் விமர்சனம் வைத்த வல்லுனர்களும் உண்டு.. இப்போது எதற்காக இத்தகைய பிரச்சாரத்தை கேரளா முன்னெடுக்கிறது?” உள்ளிட்ட பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பிரித்திவிராஜ் தமிழில் மொழி, இராவணன், காவியதலைவன்,நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Embed widget